உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / உலக சாதனை படைத்த இரண்டரை வயது சிறுவன்

உலக சாதனை படைத்த இரண்டரை வயது சிறுவன்

திண்டுக்கல் : திண்டுக்கல்லைச் சேர்ந்த இரண்டரை வயது சிறுவன் ஜெட்லி புக் ஆப் ரெக்கார்டில் பதிவு செய்து உலக சாதனை புரிந்துள்ளார்.திண்டுக்கல் பேகம்பூரை சேர்ந்த விவசாயி பாவா- நஸ்ரின் பர்மிஜா தம்பதியினரின் மகன் இசான் ஹமீஸ். இரண்டரை வயது குழந்தையான இவர் சோசியல் மீடியாவில் உள்ள நுாற்றுக்கு மேற்பட்ட லோகோக்களை 8 நிமிடம் 40 வினாடி , 60 மாவட்டங்களின் சிறப்புகளை 2 நிமிடம் 42 வினாடிகளில் கூறி ஜெட்லி புக் ஆப் ரெக்கார்டில் பதிவு செய்துள்ளார்.இந்த பதிவின் மூலம் உலக சாதனை பெற்று சூப்பர் ஹிட் சைல்டு பட்டம் பெற்றுள்ளார். இவருக்கான கோப்பை, விருது ,சான்றிதழ்களை ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட் நிறுவனர் டாக்டர் டிராகன் ஜெட்லி வழங்கினார். ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட் நடுவர்கள் பாலசுப்பிரமணி, ஜித்தேஷ் சோனி நடுவர்களாக இருந்தனர்.பெற்றோர் கூறுகையில், 'ஒரு வயதில் இருந்தே லோகோ கூறுவதில் விருப்பம் இருந்தது. லோகோக்களை மனதில் நிறுத்தி வைக்கும் ஆற்றல் அதிகரித்ததை கண்டறிந்து உலக சாதனை புரிவதற்கு நாங்கள் தினந்தோறும் பயிற்சி கொடுத்தோம்.அதன் அடிப்படையில் 100 லோகோ, 60 மாவட்ட சிறப்புகளை கூறி உலக சாதனை புரிந்தது பெருமையாக உள்ளது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ