உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / காகித ஆவணங்கள் இனி தேவையில்லை; முகத்தை காட்டி விமானத்தில் பறக்கலாம்!

காகித ஆவணங்கள் இனி தேவையில்லை; முகத்தை காட்டி விமானத்தில் பறக்கலாம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : சென்னை, கோவை விமான நிலையங்களில், ஆவணங்களை காட்ட வேண்டிய அவசியம் இல்லை. 'டிஜியாத்ரா' திட்டத்தின் கீழ், முக அடையாளத்தை காட்டி, பயணம் செய்யும் புதிய நடைமுறை விரைவில் அமலுக்கு வருகிறது.டில்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில், பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை காட்டிச் செல்ல, நேர விரயமாகிறது.

பதிவேற்றம்

அனைத்து சோதனைகளையும் முடித்து விமானத்தில் ஏற பெரிதும் சிரமப்பட வேண்டி உள்ளது. அதை தவிர்க்க, மத்திய அரசு, 'டிஜியாத்ரா' என்ற திட்டத்தை, 2022 டிச.,1ல் அறிமுகம் செய்தது.அதன்படி, பயணியர் தங்களின் ஸ்மார்ட் போன்களில், 'டிஜியாத்ரா' என்ற செயலியை பதிவிறக்கம் செய்து, அதில், ஆதார் எண், பாஸ்போர்ட் எண், கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான ஆவணம், பயணத்திற்கான டிக்கெட் உள்ளிட்ட விபரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். விமானத்தில் பயணம் மேற்கொள்ளும் நாளன்று, இவற்றில் எதையுமே எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பாஸ்போர்ட்டை எடுத்து வர மறந்து விட்டேனே என்று கவலைப்பட வேண்டியதும் இல்லை.முதற்கட்டமாக, 'டிஜியாத்ரா' திட்டம், மேற்கு வங்கம் - கோல்கட்டா, மஹாராஷ்டிரா - மும்பை, குஜராத் - ஆமதாபாத் உள்ளிட்ட, 14 விமான நிலையங்களில் அறிமுகம் செய்யப்பட்டது.இத்திட்டம், எவ்வித சிரமமும் இன்றி பயணம் செய்ய உதவியாக இருப்பதாக, விமான பயணியர் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, டிஜியாத்ரா செயலி வாயிலாக, முக அடையாளத்தை காட்டி விமான நிலையத்திற்குள் செல்லும் திட்டம், அடுத்த மாதம் தமிழகத்தில், சென்னை, கோவையில் அமலுக்கு வருகிறது.கேரள மாநிலம் - திருவனந்தபுரம், கர்நாடகா - மங்களூரு, ஆந்திரா - விசாகப்பட்டினம் உட்பட, 14 விமான நிலையங்களிலும் அமலுக்கு வருகிறது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

நடைமுறை சிக்கல்

இதுகுறித்து, விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:தற்போது நாடு முழுதும், டிஜியாத்ரா செயலியில், 4.58 மில்லியன் பயணியர் இணைந்துள்ளனர். சென்னை விமான நிலையத்தில், முக அடையாளத்தை காட்டி பயணிக்கும் திட்டத்தை, மார்ச், 31ல் அமல்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டன.அமைச்சகங்களின் ஒப்புதல் பெற வேண்டியதால், நடைமுறை சிக்கல்கள் இருந்தன. இதனால், காலதாமதமாகி விட்டது. அடுத்த மாதம் நடைமுறைக்கு வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்