உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்...!

இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்...!

'சிகிச்சைக்கு வருவோருக்கும், அவர்களுக்கு துணையாக இருப்போருக்கும் பொதுவான அறிவுரை...'- கோவை அரசு மருத்துவமனைக்குள் நுழைந்தவுடன் கணீரென்ற குரலில் மைக்கில் வரவேற்கிறார் காவலாளி வினோத்குமார்.அவர் சொல்லும் விழிப்புணர்வு அம்சங்களை கேளுங்களேன்...n மருத்துவமனையை துாய்மையாக வைத்திருக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது. கண்ணுக்கு தெரியாத கிருமி, யாரை வேண்டுமானாலும் தொற்றிக் கொள்ளலாம். எனவே, மருத்துவமனை வரும் போதும், மற்ற இடங்களிலும், நீங்கள் பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிக்க வேண்டும். n நோயாளிக்கு உதவியாக, ஒருவர் வந்தால் போதும். கூட்டம், கூட்டமாக வருவதை தவிர்க்க வேண்டும். அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள், போதை வஸ்துகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மருத்துவமனை வளாகத்தில் எச்சில் துப்பக்கூடாது. n எந்த நிலையிலும், எவ்வித பணியாளர்களுக்கும், கையூட்டு கொடுப்பது கூடாது. கையூட்டு கொடுப்பதும் குற்றம், வாங்குவதும் குற்றம்.- இந்த தகவல்களை அரை மணி நேரத்துக்கு ஒருமுறை அறிவித்து, விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார் இவர்.வினோத்குமாரிடம் பேசினோம்...''கடந்த 10 வருடங்களாக, இங்கு காவலாளியாக பணிபுரிந்து வருகிறேன். மருத்துவமனையில் நடக்கும் பல்வேறு விழாக்களை, நான் தான் தொகுத்து வழங்குவேன். கொரோனா சமயத்தில் கூட, பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டியவை குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினேன்.ஒவ்வொருவரிடம் சொல்வதை விட, ஒலிப்பெருக்கியில் சொல்வதால், மருத்துவமனை வருவோரிடம் எளிதில் சென்று விடுகிறது,'' என்றார்.இவரது ஒவ்வொரு வார்த்தையையும், மருத்துவமனைக்கு வருவோர் பின்பற்றினால், இன்னும் அருமையாக மாறி விடும் நம் அரசு மருத்துவமனை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ