உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / வடமதுரையில் கிடைத்த 13 கிலோ எடை காளான்

வடமதுரையில் கிடைத்த 13 கிலோ எடை காளான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வடமதுரை: திண்டுக்கல் மாவட்டம் புத்துார் பூசாரிபட்டி பகுதியில் புதருக்குள் இருந்து பறிக்கப்பட்ட 13 கிலோ எடை கொண்ட காளான் பொதுமக்களை வியப்படைய வைத்தது. புத்துார் பூசாரிபட்டி விறகு வெட்டும் தொழிலாளி முத்துராஜ் 37. மழைக்காலத்தில் வெயில் அதிகம் ஊடுருவாத புதர்களுக்குள் விளைந்திருக்கும் காளான்களை தேடி காலை நேரத்தில் சென்று பறிப்பது வழக்கம். நேற்று அவ்வாறு சென்ற போது விவசாய தோட்ட புதருக்குள் இருந்த ஒரு ராட்சத காளானை பறித்து எடை பார்த்தபோது 13 கிலோ இருந்தது. அதே ஊரைச் சேர்ந்த சுரேஷ் பறித்த இரு காளான்கள் முறையே 6, 5 கிலோ எடை கொண்டதாக இருந்தன. பொதுவாக காளான்கள் கையடக்க அளவில் சிறியதாக இருக்கும். பூசாரிபட்டியில் 13, 6, 5 கிலோ எடைகளில் கிடைத்த மெகா காளான்கள் கிராமத்தினரை ஆச்சரியப்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை