உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / அமெரிக்க வக்கீல் மாப்பிள்ளையை கரம் பிடித்த காரைக்குடி மணமகள்

அமெரிக்க வக்கீல் மாப்பிள்ளையை கரம் பிடித்த காரைக்குடி மணமகள்

காரைக்குடி : சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த மணப்பெண் அமெரிக்காவைச் சேர்ந்த வழக்கறிஞர் மாப்பிள்ளையை செட்டிநாடு பாரம்பரிய முறையில் திருமணம் செய்து கொண்டார்.காரைக்குடி முத்துப்பட்டினத்தைச் சேர்ந்தவர் சிதம்பரம். இவரது மகள் பிரியா அமெரிக்கா நியூயார்க்கில் மென்பொறியாளராக வேலை செய்கிறார். அவருக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த மைக்கேல் மகன் வழக்கறிஞர் சாம் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிரியா பெற்றோரிடம் அவருடனான தன் காதல் குறித்து தெரிவித்துள்ளார். இருவர் வீட்டிலும் பெற்றோர் சம்மதம் தெரிவித்த நிலையில் நேற்று காரைக்குடியில் இருவருக்கும் திருமணம் நடந்தது.செட்டிநாட்டு பாரம்பரிய முறையில் வீடு முழுக்க மாக்கோலமிட்டும், மாவிலை தோரணம் கட்டியும், நாதஸ்வரம் கெட்டிமேளம் முழங்க பிரியா, சாம் திருமணம் நடந்தது. இதில் இருவரது உறவினர்கள் ஒரே நிற பாரம்பரிய உடையில் திருமணத்தில் கலந்து கொண்டனர்.பிரியா கூறியதாவது: சொந்த ஊரில் செட்டிநாட்டு பாரம்பரிய முறையில் திருமணம் நடந்தது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை