உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / குறைந்த விலையில் களையெடுப்பு இயந்திரம் நான்காம் வகுப்பு படித்தவரின் கண்டுபிடிப்பு

குறைந்த விலையில் களையெடுப்பு இயந்திரம் நான்காம் வகுப்பு படித்தவரின் கண்டுபிடிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாகல்கோட் மாவட்டம், இளகல்லின் கந்தகல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா முகமது நடாப், 35. நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். ஆனால் ஏதாவது கண்டுபிடிப்பதில் ஆர்வமாக இருந்துள்ளார்.சில ஆண்டுகளுக்கு முன்பு, குறைந்த விலையில் கொசு ஒழிப்பு இயந்திரத்தை கண்டுபிடித்து, சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்திருந்தார்.இவரின் கண்டுபிடிப்பு, தார்வாடின் கர்நாடக விவசாய பல்கலைக்கழகத்தினரின் கவனத்தை ஈர்த்தது. அவருக்கு 'புதுமையான விவசாயி' விருது வழங்கி கவுரவித்தது. இதையறிந்த புனேயில் உள்ள ஒரு தொழிற்சாலை, அவருக்கு வேலை வாய்ப்பு வழங்கியது.விவசாயத்திற்கு தேவையான கருவிகளை குறைந்த விலையில் உருவாக்க, பாகல்கோட்டுக்கு வந்தார்.தனக்கு சொந்தமான, 16 ஏக்கர் நிலத்தில் தேவையின்றி வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற முடிவு செய்தார். இதற்காக குறைந்த விலையில், களையெடுக்கும் இயந்திரம் உருவாக்க தீர்மானித்தார்.தீவிர யோசனைக்கு பின், பேட்டரியில் இயங்கும் ஸ்பிரேயர், அரை அடியில் ஒரு பி.வி.சி., பைப், இரண்டு பி.வி.சி., மூடிகள், காய்கறிகள் வெட்டுவதற்கு எட்டு இஞ்ச் கத்தி, நட்டு, போல்டு ஆகியவற்றை பயன்படுத்தி, களையெடுக்கும் இயந்திரத்தை உருவாக்கினார்.காற்றோட்டத்துக்காக பி.வி.சி., பைப்பில் துளைகள் ஏற்படுத்தினார். தினமும் ஆறு மணி நேரம் தொடர்ந்து பயன்படுத்தினாலும், மோட்டார் சூடாவதில்லை. ஒரு நாளைக்கு நான்கு ஏக்கரில் களைகளை அகற்றலாம்.இவரது நிலத்தில், 80 தென்னை மரங்கள், ஐந்து பனை மரங்கள், 80 வேறு மரங்கள் உள்ளன. 2 ஏக்கரில் வெள்ளை சோளம் பயிரிட்டுள்ளார். இத்துடன், செம்மறி ஆடு, கோழி, மாடு, எருமைகளையும் வளர்த்து வருகிறார்.விவசாயத்துடன், 'விஸ்வஜோதி' என்ற சமூக சேவை அமைப்பை துவக்கிய ராஜா முகமது, கிராமப்புறங்களில் திறமையான மாணவர்களின் கல்விக்கும் உதவி வருகிறார் - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை