மேலும் செய்திகள்
இலையூர் சிவன் கோவிலில் மரகத லிங்கம் திருட்டு
19-Dec-2025 | 1
மூளைச்சாவடைந்த பெண் நால்வருக்கு வாழ்வளித்தார்
17-Dec-2025 | 3
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே ஆத்தங்கரை விடுதி கிராமத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட தார்ச்சாலை சிதிலமடைந்து, குண்டும் குழியுமாக மாறியது.இதையடுத்து, தமிழக முதல்வரின் சாலை பராமரிப்பு பணி திட்டத்தின் கீழ், 58 லட்சம் ரூபாய் செலவில் ஆத்தங்கரை விடுதியிலிருந்து, தெற்கு பட்டி பெத்தாரிப்பட்டி துவார் செல்லும் சாலையில், 2 கி.மீ.,க்கு தார் சாலை அமைக்கப்பட்டது.இந்த சாலை தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதால், ஆறு நாட்களிலேயே கையோடு பெயர்ந்து வருகிறது. ஏற்கனவே போடப்பட்ட தார்ச்சாலையை அப்புறப்படுத்தாமல், அதன் மேலேயே தார் ஊற்றி சாலை அமைத்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட இந்த தார்ச்சாலையின் நிலைமை குறித்து பொதுமக்கள் வெளியிட்ட வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
19-Dec-2025 | 1
17-Dec-2025 | 3