மேலும் செய்திகள்
1 வயது பெண் குழந்தையை ஒரு மாதமாக தேடும் போலீஸ்
22-Oct-2026 | 1
தந்தைக்கு ஹெலிகாப்டர் பரிசு: திமுக - எம்.எல்.ஏ., அசத்தல்
21-Oct-2026 | 17
...
19-Oct-2026
சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை; பாதிரியார் கைது
19-Oct-2026 | 5
ராமேஸ்வரம்:'அமெரிக்கா நிறுவனம் வழங்கியுள்ள விருது, மீனவர்களின் நலனுக்காக என்னை மேலும் உழைக்க துாண்டி உள்ளது' என பாம்பன் மீனவ பெண் லட்சுமி தெரிவித்தார்.ராமேஸ்வரம் அருகே பாம்பன் சின்னபாலத்தைச் சேர்ந்த மீனவ பெண் லட்சுமி,48. இவர் மீனவ பெண்களை ஒருங்கிணைந்து கடலில் பாரம்பரிய முறைப்படி மீன்பிடிப்பது, பாசி எடுப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, மீனவ பெண்கள் பொருளாதார மேம்பாட்டிற்கு உதவினார். இவரது சேவையை பாராட்டி, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கடல் வளம், சுற்றுசூழல் பாதுகாக்கும் 'சீகாலஜி' எனும் தொண்டு நிறுவனம், பாம்பன் லட்சுமியை சிறந்த 'மீனவ பெண்மணி' ஆக தேர்வு செய்து, பரிசு பெற அழைப்பு விடுத்தது.அக். 5 தேதி, சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு புறப்பட்ட லட்சுமி, அக். 8ல் கலிபோர்னியா மாகாணம் பெர்க்லின் நகரில் நடந்த விழாவில், சீகாலஜி நிறுவனம் லட்சுமிக்கு விருது மற்றும் 10 ஆயிரம் டாலர் (ரூ.6 லட்சம்) பரிசு தொகைக்கான காசோலை வழங்கியது.விருதுடன் நேற்று பாம்பன் ரயில்வே ஸ்டேஷன் வந்த லட்சுமிக்கு, ஊராட்சி தலைவர் பேட்ரிக், ஜமாத் நிர்வாகிகள், மீனவ பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.லட்சுமி கூறியதாவது:கலிபோர்னியா, பெர்க்லின் நகரில் நடந்த விழாவில், உலக அளவில் பலதுறையில் சாதித்த நுாறுக்கும் மேலான ஆண்கள், பெண்களுக்கு பரிசு வழங்கி கவுரவித்தனர். இந்த விருது மீனவ பெண்கள் வாழ்க்கை தரம், குழந்தைகள் கல்வி, கடல் வளம் பாதுகாப்புக்கு என்னை மேலும் உழைக்க துாண்டியுள்ளது. இது தமிழக மீனவ பெண்களுக்கு கிடைத்த விருது. கல்வி அறிவு இல்லாத மீனவ கிராமத்தை மத்திய, மாநில அரசுகள் தத்தெடுத்து மீனவ குழந்தைக்கு கட்டாய கல்வியை புகுத்தினால், சமூகத்தில் உயர் பதவிக்கு வருவார்கள். இதுகுறித்து மத்திய, மாநில அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம் என்றார்.
22-Oct-2026 | 1
21-Oct-2026 | 17
19-Oct-2026
19-Oct-2026 | 5