உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / சிவன்மலை கோயில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நிறைபடி நெல்

சிவன்மலை கோயில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நிறைபடி நெல்

காங்கேயம்:திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோயிலில் ஆண்டவன் உத்தரவு பெட்டி உள்ளது. முருக பக்தர்கள் கனவில் சுப்ரமணிய சுவாமி உத்தரவிடும் பொருள் இந்த பெட்டியில் வைத்து பூஜிக்கப்படுவது நுாற்றாண்டு கால வழக்கமாக உள்ளது. அடுத்த உத்தரவு வரும் வரை முந்தைய பொருள் பெட்டியில் வைத்து பூஜிக்கப்படும். அதேசமயம் இந்தப்பெட்டியில் வைக்கப்படும் பொருள் சமுதாயத்தில் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்துவதாக அல்லது நடப்பதை முன்கூட்டி கணிப்பதாக அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கடைசியாக கடந்த ஆக., மாதம் 14ம் தேதி முதல் பசுவுடன் கூடிய கன்று பொம்மை வைக்கப்பட்டது.இந்நிலையில் சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை சேர்ந்த மகாராஜா 45, என்பவரின் கனவில் நிறைபடி நெல் வைத்து பூஜை செய்ய உத்தரவாக நேற்று முதல் நிறைபடி நெல் பெட்டியில் இடம் பெற்றுள்ளது.இதுகுறித்து கோயில் சிவாச்சியர் ஒருவர் கூறும்போது, 'ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நிறைபடி நெல் இடம் பெற்றுள்ளதால் நாட்டில் வேளாண்மை செழிக்கும். அரிசி மற்றும் நெல் விலையில் மாற்றம் வரும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

rama adhavan
பிப் 10, 2024 19:58

அமெரிக்கா டாலர் நோட்டுக்களில் 'In God we believe' என்று உள்ளது. இது அவர்கள் நம்பிக்கை. நமது ரூபாய் நோட்டுக்களில் அசோக ஸ்டூபி படம் உள்ளது. சிங்கப்பூர் நோட்களில் அந்த நாட்டு தலைவர் படம் உள்ளது. இதை எல்லாம் நாம் பழிக்க கூடாது.


GV Ganesan
பிப் 10, 2024 14:16

தானாக மாறினால், நம்ப மாட்டீர்கள். யாரோ ஒருவர் செய்யும் வேலை என்று பழி போடுவீர்கள். எனவே தான் பக்தர்களுக்கு அருள் செய்கிறான் ஆண்டவன். அதன்படி செயல் படுத்தப்படுகிறது.


PR Makudeswaran
பிப் 10, 2024 10:20

உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால் உடன்பட வேண்டாம்.


Mani . V
பிப் 10, 2024 05:25

ஒருவரின் மனதில் தோன்றுவதை அடுத்தவர்களை நம்பவைக்கும் இதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது. உண்மையில் கடவுள் சக்தி என்றால் மனிதன் யாரும் மாற்றாமல் தானாகவே பொருட்கள் மாறணும்.


மேலும் செய்திகள்