உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / கணவன், 6 பிள்ளைகளை தவிக்கவிட்டு பிச்சைக்காரருடன் ஓடிப்போன மனைவி

கணவன், 6 பிள்ளைகளை தவிக்கவிட்டு பிச்சைக்காரருடன் ஓடிப்போன மனைவி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹர்தோய்: உத்தர பிரதேசத்தில், கணவன் மற்றும் ஆறு பிள்ளைகளை தவிக்கவிட்டு பிச்சைக்காரருடன் ஓடிப்போன பெண்ணை போலீசார் மீட்டனர்.உ.பி.,யின் ஹர்தோய் மாவட்டம், ஹர்பல்புர் பகுதியை சேர்ந்தவர் ராஜு, 45. இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், ஆறு குழந்தைகளும் உள்ளனர்.

மொபைல் போன்

ராஜேஸ்வரி கடந்த 3ம் தேதி காணாமல் போனார். இது தொடர்பாக, போலீசில் ராஜு புகார் அளித்தார். அதன் விபரம்: நான் வசிக்கும் ஹர்பல்புர் பகுதிக்கு, 45 வயதான நான்ஹே பண்டிட் என்ற நபர் அடிக்கடி பிச்சை எடுக்க வருவார். என் வீட்டினரும் பிச்சை அளிப்பர். அப்போது என் மனைவி ராஜேஸ்வரியுடன் பிச்சைக்காரர் நான்ஹே பேசி பழகி உள்ளார். 'மொபைல் போன்' வாயிலாக தொடர்பு கொண்டும் பேசியுள்ளார்.காய்கறி வாங்க, கடந்த 3ம் தேதி மார்க்கெட் சென்ற என் மனைவி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. வீட்டில் இருந்த எருமை மாட்டை விற்று வைத்திருந்த பணத்தை என் மனைவி எடுத்துச் சென்றுள்ளார். என் மனைவியின் மனதை மாற்றி பிச்சைக்காரர் நான்ஹே பண்டிட் அழைத்துச் சென்றுள்ளதாக தெரிகிறது. ஆறு பிள்ளைகளை தவிக்கவிட்டு சென்றுவிட்டார். அவரை கண்டுபிடித்து தர வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

வாக்குமூலம்

வழக்குப்பதிவு செய்த போலீசார், ஓடிப்போன ராஜேஸ்வரியை மீட்டனர். அவரிடம் வாக்குமூலம் பெறும் பணி நடக்கிறது. தலைமறைவான பிச்சைக்காரர் நான்ஹே பண்டிட்டை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

baala
ஜன 13, 2025 09:32

ஆண்களில் அதனை பேருமே உத்தமபுத்திரர்களா? ஏதோ ஓரிரு சம்பவங்களை வைத்து எல்லோரையும் எடை போட முடியுமா? பொறுக்கிகள் கூடத்தான் நல்லவர்களாக வேடம் தரித்து நடமாடுகிறார்கள். என்ன செய்வது? கொள்ளைக்கார்கள்/மற்றும் லஞ்ச மிருகங்கள் கூடத்தான் நல்லவர்களை போல நாட்டில் நடமாடுகிறார்கள். ஒவ்வொரு வரும் ஒரு வித மனப்பான்மை. அவ்வளவே. மிருகங்கள் மனித வடிவில் நடமாடுகின்றன அவ்வளவே.


அப்பாவி
ஜன 09, 2025 16:32

அவரை பிச்சைக்காரன் அல்ல. நம்ம விஜய் ஆண்ட்டனி படத்தப் பாத்துட்டு பிச்சைக்காரனா வாழ்கிற பணக்காரர். 48 நாள்.முடிஞ்சதும் இழுத்துக்கிட்டு ஓடிட்டாரு.


Natchimuthu Chithiraisamy
ஜன 09, 2025 11:19

குழந்தை பராமரிப்பு தாங்காமல் ஓடிப்போய்....?


subramanian
ஜன 08, 2025 22:38

நாம் நம்முடைய மனதை நல்ல படியாக வைத்து இருந்தால், அனாவசிய ஆசைகளை தவிர்த்து விடலாம்.


Muralidharan raghavan
ஜன 08, 2025 12:09

ஆறு குழந்தைகளை பெற்றும், அந்த பெண்ணின் காமவெறி அடங்கவில்லை


அப்பாவி
ஜன 08, 2025 11:02

படத்தில் 5 பசங்கதானே இருக்காங்க?


அப்பாவி
ஜன 08, 2025 11:01

பர்த்ருஹரி என்ற வடநாட்டு மன்னரின் பட்டத்து ராணி குதிரை பராமரிப்பவருடன் ஓடிவிட்டாள். இதனால் மனமுடைந்த மன்னர் ஆட்சியைத்துறந்து பத்திரகிரியார் என்னும் பெயருடன் தமிழகத்தில் வாழ்ந்து சித்தராய் மறைந்தார். அவரது பத்திரகிரியார் புலம்பல் என்னும் பாடல் தொகுப்பு புகழ்பெற்றது.


அப்பாவி
ஜன 08, 2025 08:58

இதுக்கு டபுள் இஞ்சின் சர்க்ஜார் காரணமல்ல


சம்பர
ஜன 08, 2025 06:50

காரணம் வேறு அத இங்க எழுத முடியாது


theruvasagan
ஜன 08, 2025 21:28

நீங்க சொல்ற காரணம் அப்பாவிக்கு தெரிஞ்சுதுதான். நாகரீகம் கருதி சொல்லாம விட்டுட்டாரு போல.


Kundalakesi
ஜன 08, 2025 01:34

வேலை செய்ய முடியாமல் சோம்பேறி ஆகி விட்டனர் பெண்கள். ஆண்கள் மட்டும் வேலைக்கும் சென்று இப்பொழுது வீட்டு வேலையும் பங்கு பெற வேண்டும். Majority of women doesnt prefer to do chores. So those getting angry can think your side.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை