உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / சாட்டை சுழற்ற நேரம் வந்தாச்சு!

சாட்டை சுழற்ற நேரம் வந்தாச்சு!

எஸ்.சுப்பு, குஜராத்திலிருந்து அனுப்பிய, இ - மெயில்' கடிதம்: சில நாட்களுக்கு முன் ரஷ்ய அதிபர் புடின், டுபாக்கூர் செய்தி வெளியிடுபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்தார். 'நீங்கள் எந்த செய்தியை வேண்டுமானாலும் வெளியிட்டுக் கொள்ளுங்கள். அதை தடுக்கப் போவதில்லை. ஆனால், வெளியிட்ட அந்த செய்திக்கு சரியான, முறையான ஆதாரம் காட்ட வேண்டும்.காட்ட மறுத்தாலோ, காட்ட இயலவில்லை என்றாலோ, 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்' என்றார்.அந்த நடைமுறையை, அந்த அறிவிப்பை நம் நாட்டிலும் முறையாக அறிவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றே கருத வேண்டியுள்ளது. 'தட்டிக் கேட்க ஆளில்லை யானால், தம்பி சண்டப் பிரசண்டன் ஆவான்' என்று ஒரு சொலவடை உண்டு.அந்த சொலவடையை நிரூபிப்பது போல, இங்குள்ள அரசியல்வாதிகள் பொழுது எப்போது விடியும் என்று காத்திருந்து, டுபாக் கூர் செய்திகளை பரப்பி, மக்கள் மனதில் நஞ்சை விதைத்து, மத்திய அரசின் நற்பெயருக்கு களங்கம் கற்பிப்பதிலேயே குறியாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக இன்றைய டுபாக்கூர் செய்திகள் வருமாறு:* அதானி குழுமம் முறைகேடு செய்வதற்காக பயன்படுத்திய வெளிநாட்டு நிறுவனங்களில், 'செபி'யின் தலைவர் மாதவி புரி புச் மற்றும் அவரது கணவருக்கு பங்குகள் இருந்ததாக, 'ஹிண்டன்பர்க்' நிறுவனம் குற்றச்சாட்டை சுமத்தி இருக்கிறது. அதற்கு செபி விளக்கம் அளித்திருப்பது வேறு விஷயம்* விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாக பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால், விவசாயிகள் தற்கொலை தான் தற்போது இரட்டிப்பாகி உள்ளது' என தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் கூறி உள்ளார்* தமிழகத்தில் விவசாயிகள் படும் இன்னல்கள், தற்கொலை செய்த விவசாயிகளின் எண்ணிக்கை, இவர்களது தற்கொலைக்கான காரணங்கள் என்னென்ன?' என ஈரோடு தி.மு.க., - எம்.பி., பிரகாஷ், லோக்சபா ஸ்டார் கேள்விகளின் பட்டியலில் கேட்க திட்டம் தீட்டி இருந்தார்.மஹாராஷ்டிரா மாநிலத்தில் பருத்தி பயிரிட்டு, அதனால் நஷ்டமடைந்த விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மாண்ட விவகாரம் 10 ஆண்டுகளுக்கு முன், காங்கிரஸ் கட்சியின் பொருளாதார மாமேதை மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் நடந்தது என்பது உண்மையே. ஆனால், பிரதமர் மோடி தலைமையில் அமைந்த பா.ஜ., ஆட்சியில், இந்தியாவின் எந்த மூலையிலும் எந்த விவசாயியும் தற்கொலை செய்து கொண்டு, மாண்டதாக தகவல் இல்லை.பா.ஜ., அரசின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு, சில வெளிநாட்டு சக்திகளுடன் கூட்டணி அமைத்து, இங்குள்ள கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சி, விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்று தலை நகர் புதுடில்லியில் மாதக் கணக்காக கூடாரம் அமைத்து, குடித்து கூத்தாடிக் கொண்டும், சூதாடிக் கொண்டும், டிராக்டர்களை பரப்பி நிறுத்தி, மூன்று வேளைகளும் மூக்குப் பிடிக்க உண்டு கொழுத்து, நடத்திய போராட்டத்தையே, மோடி அரசு திறமையாக சமாளித்து, பிசுபிசுக்க வைத்து விட்டது.ஆனால், இப்போதும் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மாண்டு கொண்டிருப்பது போல, சரத் பவாரும், ஈரோடு தி.மு.க., - எம்.பி., பிரகாஷும் 'கப்சா' விட்டு, கதை அளந்து கொண்டிருக்கின்றனர்.புடின் அளவுக்கு சர்வாதிகார கட்டளையை இங்கே விதிக்கப்படுவதைத் தவிர்க்க, அரசியல்வாதிகள், 'டுபாக்கூர்' அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும். தலைமை முகத்தில் கரி பூசுவதா?என்.ஏ.நாசுந்தரம், குஞ்சன்விளை, குமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: தமிழககாங்., மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, 'மாநில சுயாட்சி அடிப்படையில் நீட் தேர்வை எதிர்ப்போம்' என ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். 'நீட் தேர்வை அறிமுகம் பண்ணியதே காங்கிரஸ் ஆட்சியில் தானே.ஒரு சட்ட திட்டம் கொண்டு வரும் போது அதன் சாதக, பாதக நிலைகளை ஆராய்ந்து தான் சட்டம் நிறைவேற்றப்படும். அந்த வகையில் நிறைவேற்றப்பட்டது தான் நீட் தேர்வு... தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, இதை எதிர்த்தாலும், 'மாணவர்கள் தயாராக கால அவகாசம் வேண்டும், அதுவரை விலக்கு வேண்டும்' என்று தான் நீட் தேர்வை எதிர்த் தார்.அதே வேளையில், 'நீட் தேர்வு ரத்து இல்லை' என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் மனைவியான மூத்த வழக்கறிஞர்நளினி, 'இனி எந்த சூழ்நிலையிலும் நீட் தேர்வில் விலக்கு பெற முடியாது' என ஆணித்தரமாக சொல்லி விட்டார்.இதெல்லாம், தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை அறியாத தகவலா?நீட் தேர்வை தி.மு.க., வின் விசுவாசிகள் எதிர்க்க காரணம், தி.மு.க.,காரர்களால் நடத்தப்படும் மருத்துவ கல்லுாரிகள் வருமானத்தில் பெரிய தடை விழுந்தது தான். அதனால் தி.மு.க., வுக்கு வரவேண்டிய நிதி தடைப்பட்டது. அதனால் தான் தி.மு.க., தரப்பு நீட் தேர்வை எதிர்க்கிறது.ஆனால், காங்., அறிமுகம் செய்த திட்டத்தை, அதன் மாநில தலைவரே எதிர்ப்பது என்பது, தலைமை யின் முகத்தில் கரி பூசுவது போல் அல்லவா இருக்கிறது.பாரபட்சத்தின் உச்சகட்டம்!வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ-மெயில்' கடிதம்: ஒவ்வொரு ஆண்டும், ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்திற்கு அரசு அனுமதி மறுக்கும்; நீதிமன்றம் அனுமதி வழங்க உத்தரவிடும்; அரசு மேல் முறையீடு செய்யும்; இறுதியாக உயர் நீதிமன்றமோ, உச்ச நீதிமன்றமோ சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கச் சொல்லி உத்தரவிடும்; பின், ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலங்கள், மிக அமைதியாக நடைபெற்று முடியும். ஆர்.எஸ்.எஸ்.,ஐ வெறுக்கும் கட்சிகள், ஆர்.எஸ்.எஸ்.,சின் கொள்கைகள் தமிழகத்தில் பரவ விடக்கூடாது என்று துடிக்கும் கட்சிகள், ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலங்களில் ஏதாவது பிரச்னை செய்து அவப்பெயரைப் பெற்றுத் தர வேண்டும் என்கிற நோக்கில், இப்படி செயல்படுகின்றன. அதை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டியது, அரசின் கடமை, பொறுப்பு.சமீபத்தில், வி.எச்.பி.,யின் மாநாட்டுக்கும், அரசு அனுமதி மறுக்கப்பட்டது; பின் நீதிமன்றம் சில நிபந்தனைகளோடு அனுமதி வழங்க, அரசுக்கு உத்தரவிட்டது. ஆர்.எஸ்.எஸ்., - வி.எச்.பி., போன்ற சமூக சேவை செய்யும் அமைப்புகள், ஒழுக்கம், கட்டுப்பாடு, அமைதிக்குப் பெயர் பெற்றவர்கள். இவர்களின் ஊர்வலங்களுக்கு, மாநாட்டுக்கு, பொய்யான காரணங்களைக் கூறி அரசு அனுமதி மறுப்பது, ஒவ்வொரு முறையும் அவர்களை நீதிமன்றத்தின் கதவைத் தட்ட வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி உள்ளது, வேதனையளிக்கிறது. அவர்களின் ஜனநாயக உரிமைகளும் மதிக்கப்பட வேண்டும். அவர்களின் கொள்கைகள் ஏற்புடையதா அல்லது இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்யட்டும். வன்முறைகளுக்கும், அராஜகங்களுக்கும் பெயர் பெற்ற பல அமைப்புகளின், கட்டப் பஞ்சாயத்து செய்து வரும் கட்சிகளின், ஜாதிக் கட்சிகளின், பிரிவினைவாதம் பேசும் கட்சிகளின் பொதுக் கூட்டங்களுக்கு அனுமதி கிட்டும்போது, ஆர்.எஸ்.எஸ்., - வி.எச்.பி., அமைப்புகளின் நிகழ்வுகளுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டு வருவது பாரபட்சத்தின் உச்சகட்டம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Mohan
ஆக 18, 2024 16:14

எதெற்கெடுத்தாலும் அமலாக்க துறையை ஏவி விட்டு அரசியல் பழி வாங்கும் ஒன்றிய அரசு இதுவரை அந்த துறை மூலம் போடப்பட்ட வழக்குகளில் நிருபிக்கப்பட்ட வழக்குகள் எத்தனை ? அமலாக்க துறையை அனுப்பி கைது செய்யப்பட்டு தவறு இல்லை என்று கைதால் பாதிக்கபட்டவர் தான் நிரூபிக்க வேண்டும் என்று கூறுவது மட்டும் எப்படி முறையாகும் ? ஹேமந்த் சோரன் போன்றோர் வருட கணக்கில் சிறையில் இருந்ததற்க்கு யார் பொறுப்பு ?


mohanamurugan
ஆக 18, 2024 10:40

நேஷனல் crime ரெகார்ட் பீரோ வின் படி கடந்த 9 ஆண்டுகளில் ஒரு லட்சத்து 474 பேர் இந்திய விவசாயகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். விவசாயிகள் யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை கொள்ளவில்லை என்று பொய்யான தகவலை கூறிய அவர்கள் மீது சாட்டையை சுழற்றுங்கள் மோடி . தவறான தகவலின் அடிப்படையில் கடிதம் எழுதுபவரை ஊக்குவிப்பது உண்மையின் உரைகல் என்ற பெயருக்கு ஊறு விளைவித்து விடும்.


Kalyanasundaram Ramanathan
ஆக 18, 2024 08:14

நீ சொல்வதுபோல் விவசாயிகளின் போராட்டம் அவ்வளவு கேவலமானதென்றால்


Karunamoorthy N
ஆக 17, 2024 23:22

,அரசியலில் இது எல்லாம்.சகஜம் அப்பா.நீதியான நேர்மையனே கட்சி 3து:உம illai


Radhakrishnan V R Ramamurthi
ஆக 17, 2024 18:07

You want a foreign agency to certify Indian Investment? You call yourself as Bjp supporter. Read a lot about them.


MADHAVAN
ஆக 17, 2024 16:39

பேசுவதெல்லாம் பொய்


Jysenn
ஆக 17, 2024 14:19

As an ardent BJP supporter I would say that lacks courage and boldness to take on even worthless opponents like Rahul Gandhi, Sudalin and Mamata


Kundalakesi
ஆக 17, 2024 13:17

நன் பிஜேபி ஆதரவாளன் ஆனாலும் ஹிண்டரன்பர்க் சொல்வதில் உண்மை இருக்கிறது


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 17, 2024 17:10

என்னமோ பாஜகவுக்கும் ஹிண்டன்பர்க் க்கும் வாய்க்கால் வரப்பு தகராறு இருப்பது போல எழுதியிருக்கிறீர்கள் ... ஹிண்டன்பர்க் தங்களுக்கு வேண்டிய நிறுவனங்களை வைத்து ஷார்ட்செல் செய்வதை நமது சந்தை நிபுணர்கள் புட்டுப்புட்டு வைக்கிறார்கள் .... ஹிண்டன்பர்க் அணுகவேண்டிய முறை தவறு .... ஆனால் சரியான முறையில் அணுகினால் அவர்களே சிக்கிக்கொள்வார்கள் .... அவர்கள் மீது ஏற்கனவே பலமுறை கரும்புள்ளி விழுந்துள்ளது ....


Radhakrishnan V R Ramamurthi
ஆக 17, 2024 18:11

உண்மை இருக்கா? இவங்கள நம்பிதான் இருக்கிறாயா? சொந்தமா தெரியாதா? நீங்கள் நிறைய படிக்கவேணும்.


நிக்கோல்தாம்சன்
ஆக 17, 2024 10:18

மற்றைய நாடுகளில் எதிர்க்கட்சியினர் உண்டு , அவர்களின் நாட்டு நலனில் முன்னெச்சிரிக்கையாக நடந்து கொண்டு வருவார்கள், அனால் இந்தியாவில் ராணுவத்தினரையும் , விவசாயிகளையும் கிள்ளுக்கீரையாக காங்கிரஸ் நடத்துவது வேதனைக்குரியது, நாட்டின் முன்னேற்றத்திற்கு எத்தனை விதமான முட்டுக்கட்டைகளை இந்த INDI கூட்டணியினர் விதைத்து வருகிறார்கள்


RAMAKRISHNAN NATESAN
ஆக 17, 2024 10:12

சாட்டையை சுழற்ற நேரம் வந்தாச்சா ???? இருங்க .... இருங்க .... அவர் மதச்சார்பற்ற மஹாத்மாவாக இருக்க விரும்புகிறார் .... சோ கூறியது போல மீண்டும் ஒரு எமர்ஜென்சி தேவை .... அப்போது அது தவறான கைகளால் நிறைவேற்றப்பட்டது .... இப்போது அப்படியில்லை .... அனைத்தும் சரியாக நடக்கும் .....


kantharvan
ஆக 17, 2024 13:29

நிச்சயம் வரும் ..