வாகைச்செல்வி, எடமலைப்புதுார், திருச்சி யிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'சின்னப்பிள்ளை வெள்ளாமை வீடு வந்து சேராது' என்று ஒரு பழமொழி உண்டு. மதுரையில், நடிகர் விஜய் நடத்திய மாநாட்டைப் பார்த்தபோது, இந்த பழமொழி தான் நினைவுக்கு வருகிறது. தனக்கு வந்த கூட்டத்தைப் பார்த்ததும் மயங்கிய விஜய், என்ன பேசுகிறோம் என்ற கவனத்தை துறந்தார். முதல்வரை 'அங்கிள்' என்று அழைத்தவர், பிரதமரை பெயர் சொல்லி விளிக்கத் துவங்கினார். அவரது தகுதியில் எள்ளளவாவது விஜய்க்கு இருக்கிறதா? மூன்று முறை முதல்வர், மூன்று முறை பிரதமர் பதவியில் இருப்பதெல்லாம் சாமானிய காரியமா? நாம் சுதந்திரம் அடைந்து, 79 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், மோடி பிரதமர் ஆன பிறகு தான், உலக நாடுகள் நம்மைத் திரும்பிப் பார்க்கத் துவங்கி, தற்போது, எழுந்து நின்று மரியாதை செலுத்தும் வகையில் ஆச்சரியப்படுகின்றன. நம் நாட்டு பொருளாதாரத்தை வளர்த்தது யார்? இதையெல்லாம் தெரிந்து கொள்ள சற்று பொது அறிவு வேண்டும். சினிமா வசனத்தை யாரோ எழுதிக் கொடுத்து, அதை மனப்பாடம் செய்து ஒப்பிப்பவருக்கு இதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை. 'பா.ஜ., எங்களுக்கு கொள்கை ரீதியான எதிரி' என்கிறார். முதலில் உங்கள் கொள்கை தான் என்ன விஜய்? புரியும்படி சொல்லுங்களேன்! அடுத்து, இஸ்லாமிய சகோதரர்களுக்கு எதிராக மோடி உள்ளார் என்கிறார். முதலில் இதைச் சொல்லுங்கள்... மோடி, ஹிந்துக்களுக்கு என்ன சலுகை கொடுத்தார்; முஸ் லிம் களுக்கு என்ன சலுகையைப் பறித்தார்? சிறுபான்மையின மக்கள் மிகவும் சந்தோஷமாக வாழும் நாடு, நம் இந்தியா. முன்னாள் பிரதமர் வாஜ்பாயியின் அஸ்தியை, நாகாலாந்தில் ஒரு ஆற்றில் கரைக்கச் சென்றபோது, அங்குள்ள கிறிஸ்துவர்கள் அதை எதிர்த்தனர்; அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, வேறு ஆற்றில் அஸ்தியைக் கரைத்தது பா.ஜ., அங்கே மத உணர்வுக்கு மதிப்பளித்தது யார் என்பது விஜய்க்கு விளங்குமா? நம் பிரதமர் எந்த மேடையிலாவது, பிற மதத்தினரை அவதுாறாகப் பேசியது உண்டா? அவரைப் பற்றிப் பேச, விஜய்க்கு என்ன அருகதை இருக்கிறது? சில ஆண்டுகளுக்கு முன், கேரளாவுக்கு, பிரபல ப்ளூ பிலிம் நடிகை சன்னி லியோன் வந்திருந்தார். அவரைப் பார்க்க, லட்சக் கணக்கான மக்கள் கூடினர். உடனே சன்னி லியோனுக்கு மிகுந்த செல்வாக்கு வந்து விட்டது என்று அர்த்தம் கொள்வதா? புரிகிறதா மிஸ்டர் விஜய்? நடிகர், நடிகை என்றால், நம் மக்கள் ஓடிச் சென்று பார்ப்பர்; அது அவர்கள் இயல்பு. அந்தக் கூட்டம் ஓட்டாக மாறும் என்று, அரசியலில் புதிதாக முளைவிடத் துவங்கி இருக்கும் விஜய் எதிர்ப்பார்ப்பதை என்னவென்று சொல்வது? பன்னெடுங்காலம் அரசியலில் ஊறித் திளைத்த ஒருவரை, 'அங்கிள்' என சகட்டுமேனிக்கு விளிப்பதும், அவரை விட சீனியரான பிரதமரை பெயர் சொல்லி அழைப்பதும்... ம்ஹூம்... நாவடக்கம் வேண் டும் விஜய்க்கு! உருட்டுகளுக்கு என்ன பஞ்சம்? கே.எஸ்.தியாகராஜ் பாண் டி யன்,
காரைக்குடியில் இருந்து எழுதுகிறார்: தமிழக சுகாதார துறை அமைச்சர்
சுப்பிரமணியம், 'மருத்துவ மனைக்கு வரும் நோயாளி களை இனி மேல் மருத்துவ
பயனாளிகள்' என்று அழைக்க வேண்டும் என, திருவாய் மலர்ந்துள்ளார். இப்படி பெயர் சூட்டினால் போதும்; நோய் பறந்து விடும் என்று நினைக்கிறார் போலும்! இதில், கிட்னி திருட்டை, திருட்டு என சொல்லக்கூடாதாம்... முறைகேடு என்று தான் சொல்ல வேண்டுமாம்! மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமியோ, குடிகாரர்களை, 'மதுப்பிரியர்' என்று சொல்ல சொல்கிறார். தன் கட்சியினர் குற்றம் செய்து மாட்டிக் கொண்டால், அவர் தி.மு.க.,
உறுப்பினர் அல்ல; தி.மு.க., அபிமானி என்கிறார் முதல்வர் ஸ்டாலின். தமிழ் அகராதியில் புதுப்புது வார்த்தைகளை கண்டுபிடிப்பதில் வித்தகர் கள் தி.மு.க.,வினர். தேர்தலில் தோற்றபோ தெல்லாம் வாக்காளர்களை, 'சோற்றால் அடித்த பிண்டம்' என
கூறிய கருணா நிதியின் வாரிசுகள் அல்லவா இவர்கள்... இப்படி பேசுவதில்
வியப்பொன்றும் இல்லை. இனிமேல், திருடனை திருடன் என சொல்லக்கூடாது; பிறர் பொருள் நேசிப்பாளர் என்று தான் கூற வேண்டும் என்று சொன்னாலும் சொல்வர். கடந்த 1967 சட்டசபை தேர்தலில் ரூபாய்க்கு மூன்று படி அரிசி என்று
உருட்டியவர்கள், ஆட்சிக்கு வந்த பின், 'மூ ன்று படி அல்ல; மூன்று பிடி' என
வார்த்தை ஜாலம் காட்டினர். அதேபோன்று, 2021ல் சட்டசபை தேர்தலை
முன்னிட்டு, 'ஸ்டாலின் தான் வாராரு; விடியல் தர போறாரு...' என உருட்டினர்.
மக்களும் ஏமாந்து ஓட்டளித்தனர். இப்போது, 'மக்கள் நலன் காக்கும் ஸ்டாலின், உங்களுடன் ஸ்டாலின், ஓரணியில் தமிழ்நாடு' என விதவிதமாக உருட்ட ஆரம்பித்துவிட்டனர். இந்த உருட்டும், புரட்டும் எத்தனை துாரம் கை கொடுக்கும் என்பது வரும் தேர்தலில் தெரிந்து விடுமே! அடாவடிக்கு அழிவு நிச்சயம்! ப.ராஜேந்திரன், சென் னை யில் இருந்து
அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அமெ ரிக்கா சென்ற பாகிஸ்தான் ராணுவ தளபதி
அசிம் முனீர், அங்கிருந்தபடியே நம் நாட்டுக்கு எதிராக கொக்கரித்துள் ளார். 'சிந்து நதி இந்தியாவின் சொத்து அல்ல; தண்ணீரை நிறுத்தினால் சும்மா இருக்க
மாட்டோம். இந்தியா அணைகட்டும் வரை காத்திருப்போம். அதன்பின், 10 ஏவுகணைகளை
வீசி அணையை தகர்ப் போம்...' என்று பேசியுள்ளார். அது
மட்டுமல்லாமல், 'எதிர்காலத்தில் இந்தியா உடனான மோதலில் பாகிஸ்தானுக்கு
அச்சுறுத்தல் ஏற்பட்டால், அணு ஆயுதப் போர் வாயிலாக, உலகின் பாதி நாடுகளை
அழித்து விடுவோம்' என்றும் கூறியுள்ளார். அணு ஆயுதப் போர் ஏற்பட்டால், பாகிஸ்தான் சின்னா பின்னமாகி, உலக வரைபடத்தில் இருந்தே காணாமல் போய்விடும் என்பதை மறந்து விட்டார். அசிம் முனீர் தான் இப்படி மூளையில்லாமல் பேசுகிறார் என்றால், பாகிஸ்தான்
பிரதமர் ஷெபாஸ் ஷெரீபோ, 'எங்களுக்கு சேர வேண்டிய நீரை தடுத்தால், அதில் ஒரு
சொட்டு நீரைக் கூட இந்தியாவால் பயன்படுத்த முடியாது. நீரை வைத்து
மிரட்டினால், காதுகள் கிழியும் அளவுக்கு தக்க பாடம் புகட்டுவோம்' என்று
பேசுகிறார். அமெரிக்கா அதிபர் டிரம்பின் பக்கபலம் தங்களுக்கு இருக்கு என்ற மிதப்பில், இப்படி வாய் சவடால் விட்டுக் கொண்டிருக் கின்றனர். இந்நிலையில், நம் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால்,
'இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து மிரட்டல் தொனியில் பேசினால், நாங்கள்
சும்மா இருக்க மாட்டோம். இதுவரை கண்டிராத மோசமான விளைவுகளை பாகிஸ்தான்
சந்திக்க வேண்டி வரும். நீங்கள் இதுவரை பார்த்ததெல்லாம் வெறும் 'டிரெய்லர்'
தான்...' என பதில் கொடுத்துள்ளார். 'தவளை தன் வாயால் கெடும்' என்பது போல், பாகிஸ்தான் தன் அடாவடி பேச்சால், அழிவது நிச்சயம்!