உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / நிர்வாகிகள் மீது அக்கறை!

நிர்வாகிகள் மீது அக்கறை!

சேலம் மாவட்டம், ஆத்துார் அடுத்த கல்வராயன்மலை, கரியக்கோவில் மலை கிராமத்தில் உள்ள கரியராமர் கோவிலில், அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி பிறந்த நாளையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.பூஜையில் பங்கேற்ற பழனிசாமிக்கு, சுவாமிக்கு படையல் வைத்த சர்க்கரை பொங்கல் உள்ளிட்ட பிரசாதம் வழங்கப்பட்டது. அப்போது, கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க., செயலரான குமரகுருவுக்கு, அர்ச்சகர்கள் பிரசாதம் கொடுக்க சென்றனர்.இதை பார்த்த பழனிசாமி, 'குமரகுருவுக்கு, சர்க்கரை அதிகளவில் இருப்பதால், அதிகமாக சர்க்கரை பொங்கல், இனிப்புகள் வழங்காதீர்கள்' என கூறினார். இதனால், பிரசாதம் சாப்பிட ஆவலுடன் காத்திருந்த குமரகுரு முகத்தில் ஏமாற்றம் படர்ந்தது.இதை கவனித்த தொண்டர் ஒருவர், 'தன் கட்சி நிர்வாகிகள் உடல்நிலை மீது பொது செயலர் எவ்வளவு அக்கறையா இருக்காரு பார்த்தீங்களா...' என, சக தொண்டரிடம் முணுமுணுக்க, அவரும் ஆமோதித்து சிரித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி