உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / முதல்வர் எதுவுமே செய்யலையா?

முதல்வர் எதுவுமே செய்யலையா?

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நுாற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம், முதல்வர் ஸ்டாலின் தொகுதியான சென்னை, கொளத்துாரில் நடந்தது. இதில், கவிஞர் வைரமுத்து பங்கேற்றார்.அப்போது பேசுகையில், 'பிரதமர் மோடி சில தினங்களுக்கு முன், கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்தார். அவர் தியானம் செய்தது விவேகானந்தர் மண்டபம். ஆனால், வணங்கியது திருவள்ளுவர் சிலை; அதை அமைத்தவர் கருணாநிதி. தமிழகத்தில் கருணாநிதி செல்லாத இடம் உண்டா, அவர் எழுதாத நுால் உள்ளதா... அவர் கொண்டு வராத திட்டம் ஏதும் உள்ளதா, திறக்காத பள்ளி ஏதும் உள்ளதா?' என, கேள்வி எழுப்பியபடி பேசினார்.இதை கேட்ட தொண்டர் ஒருவர், 'இப்ப முதல்வரா இருக்கிற நம்ம தலைவர் ஸ்டாலின் எதுவுமே செய்யல'ன்னு சொல்ல வர்றாரா...' என முணுமுணுக்க, அருகில் இருந்தவர், 'அதானே...' என ஆமோதித்து சிரித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Barakat Ali
ஜூன் 11, 2024 14:24

வைரத்துக்கு சர்வாதிகாரி மீது என்ன கோபமோ ????


CHELLAKRISHNAN S
ஜூன் 11, 2024 11:37

correct. the foundation stone was laid by mgr


Ranganathan
ஜூன் 11, 2024 08:09

Many Thanks Mr. Sankaranarayanan. Atleast you bring the factual information. The full credit of Thiruvalluvar statue goes to MGR


D.Ambujavalli
ஜூன் 11, 2024 06:23

விழா யாருக்காக நடக்கிறதோ அவரது சாதனைகளை முன்னிறுத்துவதுதான் வழக்கம். இதில் ஸ்டாலினுக்கு எதற்கு தனிப்புகழ்ச்சி ?


sankaranarayanan
ஜூன் 11, 2024 00:37

திருவள்ளுவர் சிலையை குமாரி முனையில் அமைத்தவர் எங்கள் எம்.ஜி.ஆர். அல்லவா அதை இவர் கட்டுக்கவிதையை விட்டுவிட்டு காவியமாக படைக்க வந்துள்ளாரே. அந்தக்கோ சரித்திறத்தையே மாற்றுகிறாராரே?


சமீபத்திய செய்தி