உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / பழக்க தோஷம் விடுமா?

பழக்க தோஷம் விடுமா?

சென்னை, பூந்தமல்லி அரசு பள்ளி மைதானத்தில் விளையாட்டு அரங்கம் கட்ட, அடிக்கல் நாட்டும் விழா நடந்தது. பூந்தமல்லி தி.மு.க., - எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி, தி.மு.க.,வைச் சேர்ந்த நகராட்சி தலைவர் காஞ்சனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக அடிக்கல் நாட்ட வேண்டும் என, அவசரமாக விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்து கொண்டிருந்ததால், வழக்கமாக கட்சியினர் செய்யும் பட்டாசு வெடிப்பது, வாழ்க கோஷம் போடுவது என, எந்த சலம்பலும் இருக்கக் கூடாது என, முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது.அதையும் மீறி, எம்.எல்.ஏ., அடிக்கல் நாட்டியதும், நிர்வாகிகள் சிலர் பலமாக கைதட்ட, அவர்களை சக நிர்வாகிகள் எச்சரித்து, அமைதியாக இருக்கும்படி கூறினர்.மூத்த நிருபர் ஒருவர், 'என்ன தான் சொல்லி கூட்டிட்டு வந்தாலும், பழக்க தோஷம் இவங்களை விடுமா...?' என, 'கமென்ட்' அடித்து சிரித்தபடி நடந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ