உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / பெயரை கெடுக்க போலீஸ் போதும்!

பெயரை கெடுக்க போலீஸ் போதும்!

கோவையில், 'தமிழ்ப் புதல்வன்' திட்டத்தை துவக்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பால திறப்பு விழாவுக்கு சென்றார். அதே மேம்பாலத்தில் காரில் பயணித்து திரும்பி வந்தார்.அவர் பயணித்த வாகனத்தை, விக்டோரியா ஹால், பூம்புகார் வழியாக மணிகூண்டு பகுதிக்கு, 'ஒன்வே'யில் போலீசார் அழைத்து வந்தனர். முதல்வர் வருகையால், மற்ற சாலைகளில் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. 'பைவ் கார்னர்' வழியாக வந்த ஆம்புலன்ஸ் நெரிசலில் சிக்கியது.சைரன் ஒலித்த போதிலும், ஆம்புலன்சுக்கு வழி ஏற்படுத்திக் கொடுக்க, போலீசார் முன்வரவில்லை. அதற்கு பதில், சைரனை சிறிது நேரம் அணைத்து வைக்கும்படி டிரைவரிடம் அறிவுறுத்தினர். பின், அவசரம் கருதி, ஆம்புலன்சை கால்நடை மருத்துவமனை வழியாக சுற்றிச் செல்லுமாறு அறிவுறுத்தினர்.பார்வையாளர் ஒருவர், 'முதல்வர் பெயரை கெடுக்க போலீசே போதும்... ஆம்புலன்சை யாராவது திருப்பி அனுப்புவாங்களா...' என, புலம்பியவாறு நடந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
ஆக 23, 2024 16:49

நாளை முதல்வரின் convoy , அவர் வாகனத்தைத் தடை செய்ததாக ஒரு அல்லக்கை ஆர்ப்பாட்டம் செய்து, பதவிக்கு உலை வைத்துவிடும் போலீஸ் நாலு பக்கமும் இடிபட பிறந்த ஜீவன்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை