உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / இவர் நல்லாவே துதி பாடுறாரு!

இவர் நல்லாவே துதி பாடுறாரு!

கோவை கலெக்டர் அலுவலகத்தில், கட்டுமான அமைப்பு சாரா தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டம், கலெக்டர் கிராந்திகுமார் தலைமையில் நடந்தது. இதில், தமிழக கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன்குமார் பேசுகையில், 'அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் உள்ள தரவுகள் காணாமல் போய்விட்டன என்று தவறான செய்திகளை பரப்புகின்றனர்.'ஆனால், தொழிலாளர்களின் தொலைந்து போன ஆவணங்கள் திரும்ப கேட்டு பெறப்பட்டன. அது தான் உண்மை. அதை புரிந்து கொள்ளா மல், எங்கள் மீது அவதுாறு சுமத்தி வருவது வருத்தத்திற்குரியது. தமிழகத்தின் திராவிட மாடல் ஆட்சியை நாடே போற்று கிறது' என்றார்.தொழிற்சங்க பிரதிநிதி ஒருவர், 'திராவிட மாடல் ஆட்சியை நாடு போற்றுதோ, இல்லையோ... வாரிய தலைவர் பதவி தந்ததற்கு நன்றிக்கடனா இவர் நல்லாவே துதி பாடுறாரு...' என முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்து தலையாட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ