உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / தலைவலி வரத்தான் செய்யும்!

தலைவலி வரத்தான் செய்யும்!

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு நிறைவு விழா, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, விருதுநகரில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், 'நிதி அமைச்சராக தங்கம் தென்னரசு மட்டும் இல்லாமல், வேறு ஒருவர் இருந்திருந்தால், மகளிர் உரிமைத் தொகை கொடுத்திருக்க முடியாது. அதேபோல, அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு போன்று ஒரே மாவட்டத்தில் இருக்கும் இரண்டு அமைச்சர்கள் ஒற்றுமையாக இருந்தால், தலைமைக்கு தலைவலியே வராது' என்றார்.மூத்த நிருபர் ஒருவர், 'கட்சி ஒருவரை சார்ந்து இருக்கக் கூடாதுன்னு மாவட்டத்துக்கு ரெண்டு பேரை கொம்பு சீவி வளர்த்து, அவர்களை அமைச்சராகவும் ஆக்குவது அதே தலைமை தான்... அப்புறம் தலைவலி, வயிறு வலி எல்லாம் வரத்தானே செய்யும்...' என, 'கமென்ட்' அடிக்க, மற்றவர்கள் ஆமோதித்து சிரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
ஜூன் 16, 2024 06:38

நிதி அமைச்சர் ஒன்றும் கைக்காசைத்தூக்கி பெண்களுக்கு கொடுத்துவிடவில்லை மக்களின் வரிப்பணத்தில் செய்ய வேண்டிய பொது வேலைகள் எல்லாம் கிடைக்க, வோட்டுப் போட்டுவிட்டு, சொன்னபடி கொடுக்காத அரசை திட்டித்தீர்த்த பிறகு, தகுதி அடிப்படை என்று filter செய்து கொடுக்கிறது அரசு மேடை, மைக் கிடைத்தால் ஒரே தூக்கு தூக்கிவிடுவதா ?


சமீபத்திய செய்தி