உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / இன்னும் மோசமா தானே இருக்கு!

இன்னும் மோசமா தானே இருக்கு!

சென்னை, அம்பத்துாரில் நடந்த கருணாநிதி நுாற்றாண்டு விழா கூட்டத்தில், ராஜ்யசபா தி.மு.க., -- எம்.பி.,க்கள் குழு தலைவர் திருச்சி சிவா பங்கேற்றார்.அப்போது அவர் பேசுகையில், 'இந்த பிரபஞ்சத்தில் மனிதன் வாழக்கூடிய தகுதியான ஒரே கிரகம் பூமி தான். ஆனால், இந்த பூமியில், மனிதனுக்கு பயன்படக்கூடிய தண்ணீர் 3 சதவீதம் மட்டுமே உள்ளது. அதையும் ரசாயனம் உள்ளிட்ட எதை, எதையோ விட்டு வீணாக்கி, பாழாக்கி விடுகிறோம்.எதிர்கால தலைமுறைக்கு, நாம் எந்த வசதியும் செய்து கொடுக்கலாம். ஆனால், குடிக்க சுத்தமான தண்ணீர், சுவாசிக்க சுத்தமான காற்று, அவர்களுக்கு கிடைக்குமா என்பது தெரியாது. இதையெல்லாம், அபாய அறிவிப்பாக சொல்கிறோம். ஆனால், அதற்கு தேவை யானதை அரசு வாயிலாக செய்வோம்' என்றார். இதைக் கேட்ட பார்வையாளர் ஒருவர், 'இவர் சொல்றது சரி... ஆனால், இவங்க ஆட்சியில் தண்ணீர், காற்று மாசு இன்னும் மோசமா தானே இருக்கு...' என, 'கமென்ட்' அடிக்க, மற்றவர்கள் ஆமோதித்து தலையாட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
ஜூன் 18, 2024 06:33

மழைத் தண்ணீர் நேராக கடலுக்குப் போகிறது தேக்கி வைக்க ஆறு குளமெல்லாம் சுரண்டி ஆகிவிட்டது இவர்கள்தான் எதிர்கால சந்ததிக்காக உருகுகிறார்களாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை