உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / ஜால்ரா போடுற தைரியம் தான்!

ஜால்ரா போடுற தைரியம் தான்!

தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின், 41வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, வணிகர் விடுதலை முழக்க மாநாடு மதுரையில் நடந்தது. அந்த அமைப்பின் தலைவர் விக்கிரமராஜா, அவரது மகன் தி.மு.க., - எம்.எல்.ஏ.,வான பிரபாகர் ராஜா ஆகியோர் வீடு, சென்னை கே.கே.நகரில் இருப்பதால், இந்த மாநாட்டிற்கான பேனர்கள், அவர்கள் வீடு உள்ள கோடம்பாக்கம் மண்டலத்தின் பல இடங்களில் வைக்கப்பட்டன. இவற்றை அனுமதி பெறாமல் வைத்ததாக, மாநகராட்சி உதவி பொறியாளர் ஒருவர் அகற்றவே, ஆத்திரமடைந்த பிரபாகர் ராஜா ஆதரவாளர்கள், அரசு அதிகாரி என்றும் பாராமல் உதவி பொறியாளரை கன்னத்தில் அறைந்தனர். மேலும், போலீசில் புகார் அளிக்கக்கூடாது என்றும் அவரை மிரட்டினர்.இதையறிந்த சக மாநகராட்சி ஊழியர்கள், 'ஆளுங்கட்சிக்கு ஜால்ரா போடுற தைரியத்துல தான், வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகிகள், அரசு அதிகாரியை அடிக்கும் அளவுக்கு வந்து விட்டனர்...' என, முணுமுணுக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
மே 13, 2024 07:00

'பரம சிவன் கழுத்துப் பாம்பு' அடிக்க மட்டுமா செய்வார்கள்' கொலை செய்தால்கூட எளிதில் தப்பிவிடுவார்கள்


சமீபத்திய செய்தி