உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / தாராளமா அரசியலுக்கு வரலாம்!

தாராளமா அரசியலுக்கு வரலாம்!

உழைப்பாளர் தினம் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில், படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளருமான சந்தோஷ் நம்பிராஜன் பேசுகையில், 'ஒரு நகைச்சுவை நடிகரோட ஒரு நாள் சம்பளம் 10 லட்சம் ரூபாய். அவரோட உதவியாளருக்கு, 30,000 ரூபாய். அதில், 2,000 ரூபாயை மட்டுமே அவருக்கு கொடுத்துவிட்டு, மீதியை அந்த நடிகர்களே எடுத்துக் கொள்கின்றனராம். அதே சமயம், 10,000 ரூபாய் இல்லாமல் நகைச்சுவை நடிகர் சேஷு இறந்து போகிறார். கடந்தாண்டு, 'போண்டா' மணி இறந்து போனார். நடிகர் சங்கத்திற்கு கட்டடம் கட்டுகின்றனர். அதை விட, மனித உயிர் தான் முக்கியம். ஒரு நடிகரின் வாழ்க்கையை காப்பாற்றாத சங்கம் எதற்கு?' என்றார்.மூத்த நிருபர் ஒருவர், 'இந்த கேள்விக்கு மட்டும் நடிகர் சங்க பொதுச்செயலர் விஷால் சரியா பதில் சொல்லிட்டா, அவர் தாராளமா அரசியலுக்கு வரலாம்...' என, முணுமுணுத்தவாறு நடையை கட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
மே 01, 2024 06:46

நகைச்சுவை நடிகருக்கு உதவியாளராக இருந்தே ஆயுளை முடிக்கும் அவர்கள் நடிகர் கொடுக்கும் அற்ப தொகையை எதிர்த்து நிற்க முடியாது அவர்களை முன்னேறவும் விடமாட்டார்கள் திரைத்துறையின் இந்த politics ஐ சரி செய்தபின் நாட்டை சரி செய்யட்டும்


புதிய வீடியோ