உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / எட்டுக்கட்டையில் பாடினாரே!

எட்டுக்கட்டையில் பாடினாரே!

ஈரோடு மாவட்ட காங்., நிர்வாகிகள் கூட்டத்தில், மூத்த தலைவர் இளங்கோவன் பேசுகையில், 'தமிழகத்தில் ஸ்டாலின் நல்லாட்சி தருகிறார். இது காமராஜர் ஆட்சிக்கு இணையானது' என்றார்.தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில், 'நாம் நினைத்தால் தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை உருவாக்க முடியும். அதற்காக ஸ்டாலின் ஆட்சி மோசம் என கூறவில்லை. 1980 சட்டசபை தேர்தலில், 112 சீட், 2011ல் 62 சீட், கடந்த தேர்தலில் 25 சீட் பெற்றுள்ளோம். இதற்கான காரணத்தை, நம்மை நாமே பரிசீலனை செய்து கொள்ள வேண்டும். இதை மாற்ற புதிய கட்டமைப்பை உருவாக்க வேண்டும்' என்றார்.கட்சி நிர்வாகி ஒருவர், 'அதற்கு அடுத்த கட்சி புகழ்பாடிகளை முதலில் நாம் துாக்கி எறியணும்...' என, முணுமுணுக்க, மற்றொரு நிர்வாகி, 'அட நம்ம தலைவரே எட்டுக்கட்டையில தி.மு.க., புகழ் பாடிட்டு தானே இருந்தார்... இப்ப திடீர்னு தானே இப்படி பேசுறார்...' என, முணுமுணுத்துக் கொண்டே நடந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
மே 24, 2024 06:28

கட்சியை சுக்கு நூறாக உடைத்து மாநிலக் கட்சிகளுக்கு அடகு வைத்துவிட்டு, ஒரு சீட், அரை சீட்டுக்குத் தொங்கும் நிலைக்கு kondu வந்தபின் வாய்ப்பந்தல் பேச்சு எதற்கு ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை