உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / உண்மை நிலையை சொல்றாரு!

உண்மை நிலையை சொல்றாரு!

ராமநாதபுரத்தில், 'நண்பர்கள் ஹெல்பிங் ஹேண்ட்ஸ் டிரஸ்ட்' சார்பில் கிரிக்கெட் வீரர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில், இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சாய்சா டூமினி நுவான் தரங்கா, தற்போதைய கிரிக்கெட் வீரர் ஷேக்கு பிரசன்னா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதில், தரங்கா கூறுகையில், 'அமெரிக்காவில் நடைபெற உள்ள, 'டி20' உலக கோப்பைக்கு இந்தியா உறுதியான அணியை பெற்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி தன் சொந்த நாட்டில் விளையாடவுள்ளது. தற்போதைய சாம்பியன் ஆஸ்திரேலியா அணியும் வலுவாக உள்ளது. உலக கோப்பை போட்டியை எதிர்கொள்ள இலங்கை அணியும் தயாராகி வருகிறது' என்றார்.மூத்த நிருபர் ஒருவர், 'இலங்கை அணி கோப்பை வெல்லும்னு ஒரு பேச்சுக்கு கூட சொல்ல மாட்டேங்கிறாரே... சொந்த நாட்டு வீரர்கள் மீது துளி கூட நம்பிக்கை இல்லையா...?' என, முணுமுணுக்க, மற்றொரு நிருபர், 'அவர் உண்மை நிலையை சொல்றாரு...' என, 'கமென்ட்' அடித்து சிரித்தவாறு நடந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ