உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / நடிகையரை இறக்கி இருக்கலாம்!

நடிகையரை இறக்கி இருக்கலாம்!

வடசென்னை பா.ஜ., வேட்பாளர் பால் கனகராஜை ஆதரித்து, மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங், எண்ணுார், சுனாமி குடியிருப்பு பகுதியில் ஓட்டு சேகரிக்க வந்தார்.அப்போது, குடியிருப்பில் வசிக்கும் சிலர், அவரை யாரென்று தெரியாததால், 'யாரா இருக்கும்...?' என, அவர்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர். சிறுவர்கள் சிலர், 'ஓட்டு கேட்க மோடி வந்திருக்காரு...' என, புரளியை கிளப்பி விட்டனர். தொடர்ந்து, பிரசார வாகனத்தை உற்று நோக்கிய சிலர், 'இவர் மோடி இல்லப்பா... அவரோட பிரண்டா இருக்குமோ...?' என, அப்பாவியாக பேசிக் கொண்டனர்.இதை கவனித்த மூத்த நிருபர் ஒருவர், 'இவரை யாருன்னே தெரியாத மக்கள், இவர் சொல்லி பா.ஜ.,வுக்கு ஓட்டு போடப் போறாங்களா...?' என கேள்வி எழுப்ப, மற்றொரு நிருபர், 'பேசாம நடிகையரை பிரசாரத்துல இறக்கி இருந்தாலாச்சும் பிரயோஜனமா இருந்திருக்கும்...' என, 'கமென்ட்' அடித்து சிரித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை