உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / பீர் அடிக்கிற நேரத்துல மோரா?

பீர் அடிக்கிற நேரத்துல மோரா?

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், மணப்பாறை, மருங்காபுரி ஒன்றியங்கள், மணப்பாறை நகர பகுதிகளில், தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சரும், மாவட்ட செயலருமான மகேஷ் நீர்மோர் பந்தல்களை திறந்து வைத்தார்.மணப்பாறை நகரில் மாரியம்மன் கோவில் அருகே அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை, அமைச்சர் மாலை 5:00 மணிக்கு திறப்பார் என, அறிவிக்கப்பட்டது. ஆனால், அமைச்சரோ இரவு, 7:30 மணிக்கு தான் மணப்பாறை வந்து, நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார். கட்சியினர் இரண்டரை மணி நேரத்துக்கு மேல் அமைச்சர் வருகைக்காக காத்திருந்தனர். இரவில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தலால், அவற்றை வாங்கி பருக ஆட்கள் இல்லை.குசும்புக்கார தொண்டர் ஒருவர், 'பீர் அடிக்கிற நேரத்தில் நாம மோர் கொடுத்தால் யார் தான் குடிக்க வருவாங்க...?' என, 'கமென்ட்' அடிக்க, மற்றவர்கள் நமட்டு சிரிப்பு சிரித்தபடி நடந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

கண்ணன்
மே 08, 2024 07:02

பீர் குடிக்க அவர் சென்றுவிடலாமே!


D.Ambujavalli
மே 08, 2024 06:42

தேவையான பொழுது எந்த நல்லதும் செய்யாமல், எல்லா இடத்திலும் தாமதம் செய்து கெத்துக்காட்டும் அமைச்சருக்கு ‘கொதிக்கும் வெயிலில் குடிக்கும் மோரை நிசி ராத்திரியில் குடிக்கட்டும், என் ‘மரியாதையை’ கெடுத்துக்கொண்டு நேரத்தில் வந்துவிடுவேனா?’ என்பதுதானே கொள்கை


சமீபத்திய செய்தி