உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / விழிப்புணர்வில் விளம்பரம்!

விழிப்புணர்வில் விளம்பரம்!

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், தேர்தல் விழிப்புணர்வுக்கான கோலப் போட்டி நடந்தது. இதில், 'தங்கத்தாமரை' என்ற பெயர் கொண்ட மகளிர்சுய உதவி குழுவினர், தாமரை மலர்களுடன் கூடிய கோலம் வரைந்து, அதன் மேல், 'அனைவரும் ஓட்டளிக்க வேண்டும்' என, எழுதி இருந்தனர். இதைப் பார்க்க, பா.ஜ.க.வின் தாமரை சின்னத்திற்கு ஓட்டளிக்க வேண்டும் என கூறுவதை போல இருந்தது.இதைப் பார்த்து டென்ஷன் ஆன அதிகாரிகள், 'நாம விழிப்புணர்வுக்கு தான் கோலப்போட்டி நடத்துனோம்... இப்படி ஒரு கட்சிக்கு விளம்பரமா ஆகிப்போச்சே...' என, முணுமுணுத்தனர்.ஆளுங்கட்சியினரோ, 'சூரியன் பெயரில் மகளிர் குழு இருக்கான்னு தேடி பிடிங்க... அடுத்த நிகழ்ச்சியில், நாம உதயசூரியனை வரைந்து, விழிப்புணர்வு பெயரில் விளம்பரம் தேடலாம்...' என, தங்களுக்குள் முணுமுணுத்தவாறு நடந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ