உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / உக்ரைனுக்கா போக முடியும்...?

உக்ரைனுக்கா போக முடியும்...?

அ.தி.மு.க., ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட தொண்டர்களின் உரிமை மீட்புக்குழு ஆலோசனை கூட்டம், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில், மதுரையில் நடந்தது. இதில், அவரது ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் பேசுகையில், 'பழனிசாமி தரப்பினர் கூட்டணிக்கும், தேர்தல் அறிக்கை தயாரிக்கவும் இரு குழுக்களை அமைத்துள்ளனர். கூட்டணி குறித்து பேச வேண்டிய குழு, யாராவது வருவரா என, காத்துக் கொண்டிருக்கிறது. 'லோக்சபா தேர்தலில் தேசிய பிரச்னைகள் குறித்து விவாதித்து, தேர்தல் அறிக்கை தயாரிக்க வேண்டும். அதை விடுத்து, இவர்கள் ஊர், ஊராக கருத்து கேட்க செல்கின்றனர். உள்ளூர் பிரச்னை குறித்து தேர்தல் அறிக்கையில் சேர்க்க, இதென்ன மாநகராட்சி தேர்தலா...?' என்றார்.மூத்த நிருபர் ஒருவர், 'அது சரி... நம்ம மாநிலத்துக்கான தேசிய பிரச்னையை அறிந்து, அறிக்கை தயாரிக்க ஊர், ஊரா போகாம, உக்ரைனுக்கா போக முடியும்...' என, 'கமென்ட்' அடிக்க, மற்றவர்கள் சத்தமாக சிரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை