உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / தரமா வாங்கியிருக்கலாமே!

தரமா வாங்கியிருக்கலாமே!

தஞ்சாவூர் மாநகராட்சியில் நடந்த பொங்கல் விழாவில், மேயர் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, கமிஷனர் மகேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.விழாவில், கோலப் போட்டி, சாக்கு போட்டி, பலுான் ஊதி உடைத்தல், லெமன் ஸ்பூன், பாட்டு போட்டி, இசை நாற்காலி, கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன.கயிறு இழுக்கும் போட்டியில், மேயர் ராமநாதன் தலைமையில் ஆண் பணியாளர்கள் ஒரு அணியாகவும், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, கமிஷனர் மகேஸ்வரி தலைமையில் பெண் பணியாளர்கள் ஒரு அணியாகவும் போட்டியிட்டனர்.கயிற்றை இருதரப்பும் போட்டி போட்டு இழுத்த சிறிது நேரத்தில், கயிறு அறுந்து, மேயர், துணை மேயர், கமிஷனர் என, அனைவரும் கீழே விழுந்ததால், அங்கிருந்தவர்கள் பதற, கீழே விழுந்தவர்கள் சிரித்தவாறு எழுந்து சமாளித்தனர்.பார்வையாளர் ஒருவர், 'அட, இந்த கயிற்றையாவதுமாநகராட்சி அதிகாரிகள் தரமா வாங்கி இருக்கலாமே...' என, 'கமென்ட்' அடித்தபடி நடந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ