மேலும் செய்திகள்
லஞ்சம் வந்த வழி... ஆளுங்கட்சி விஐபி 'கிலி'
10-Nov-2025
சமீபத்தில் பெய்த கனமழையால், சென்னையின் குடிநீர் ஆதாரமான புழல் ஏரி நிரம்பி, வினாடிக்கு, 2,500 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால், சென்னை மாநகராட்சியின் மணலி மண்டலம், 19வது வார்டு பாலசுப்பிரமணியம் நகரில் உள்ள குடியிருப்புகள் நீரில் மூழ்கின. அங்கு வசித்தவர்களை, தேசிய பேரிடர் மீட்பு படையினர் உதவியுடன் மாநகராட்சி அதிகாரிகள் மீட்டனர். 16 குடும்பங்களைச் சேர்ந்த, 44 பேர் மீட்கப்பட்டு, மாத்துார் அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். இதையறிந்த, 180 பேர், 'நாங்களும் பாலசுப்பிரமணியம் நகரில் தான் வசிக்கிறோம்' என கூறி, அங்கு வந்து விட்டனர். அவர்களுடன் சேர்த்து, 224 பேர் இருந்ததை பார்த்த மாநகராட்சி அதிகாரி ஒருவர், 'என்னப்பா இது... மீட்கும் போது, 44 பேர் இருந்தாங்க; இப்ப, 224 பேர் இருக்காங்களே... நிவாரண நிதி தருவோம்னு நினைச்சு வந்துட்டாங்களோ...' என கூற, சக அதிகாரிகள் ஆமோதித்தபடியே நகர்ந்தனர்.
10-Nov-2025