உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  டீ, வடை குடுத்து கவர் பண்றாரே!

 டீ, வடை குடுத்து கவர் பண்றாரே!

திருப்பூர் மாநகராட்சி, நான்காவது மண்டலத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம், வேலாயுதசாமி திருமண மண்டபத்தில் சமீபத்தில் நடந்தது. முகாமுக்கு வந்த பொதுமக்களுக்காக, திருப்பூர் தெற்கு தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., செல்வராஜ், தனியே டீ ஸ்டால் அமைத்திருந்தார். முகாம் நடந்த மண்டபத்தின் ஒரு பகுதியில், 'செல்வராஜ் டீ கடை' என்ற பெயரில், 'ஸ்டால்' அமைக்கப்பட்டு, வடை மற்றும் டீ, காபி ஆகியவை, சுடச்சுட இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. முகாம் துவங்கியதில் இருந்து முடிவடையும் வரை, அனைவருக்கும் வடை, டீ தொடர்ந்து வழங்கப்பட்டது. அங்கு வடையை சாப்பிட்டு, டீயை குடித்த கட்சித் தொண்டர் ஒருவர், 'தேர்தல் வர்றதால, முதல்வர் உத்தரவுப் படி, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடத்துறாங்க... எம்.எல்.ஏ.,வும் தன் பங்குக்கு வடை, டீ குடுத்து, ஓட்டு களை 'கவர்' பண்றாரு பாருங்க...' என, 'கமென்ட்' அடிக்க, அருகில் இருந்தவர்கள் சிரித்தபடியே கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை