மேலும் செய்திகள்
லஞ்சம் வாங்க தனியறை... 'வெளங்குமா' கனிமவளத்துறை!
26-Nov-2024
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினத்தை ஒட்டி, அவரது நினைவிடத்தில் அ.தி.மு.க., ஒருங்கிணைப்பு குழு சார்பில், பெங்களூரு புகழேந்தி தலைமையில் மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது.நிகழ்ச்சியில், உறுதிமொழி ஏற்று புகழேந்தி பேசுகையில், 'கூட்டணிக்காக கொள்கையை விட்டு அலையும் கூட்டம் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழி வந்த கூட்டம் அல்ல; வேறு கட்சிக்கு இயக்கத்தை அடகு வைத்து, தங்கள் சொத்துக்களை பாதுகாக்க துடிக்கும் தலைவர்களை விரைவில் அடையாளம் காட்டுவோம்' என்றார்.இதைக் கேட்ட தொண்டர் ஒருவர், 'இவர் பேசுறதைபார்த்தால், பழனிசாமி, பன்னீர்செல்வம் ரெண்டு பேரையும் திட்டுற மாதிரி தெரியுதே... அப்புறம் எங்கிருந்து கட்சியை ஒருங்கிணைப்பார்...' என முணுமுணுக்க, மற்றொரு தொண்டர், 'இவர் அ.தி.மு.க., தொண்டர்களை ஒருங்கிணைத்து, வேறு ஏதாவது கட்சியில் சேர்ப்பாரோ என்னமோ...?' என, 'கமென்ட்' அடித்து சிரித்தார்.
26-Nov-2024