கூட்டணிக்காக அடக்கி வாசிக்கிறாரோ?
மதுரையில், பா.ம.க., அன்புமணி நடத்திய, 'உரிமையை மீட்க, தலைமுறையை காக்க' என்ற தலைப்பில் பொதுக் கூட்டம் நடந்தது. ஆவேசத்துடன் பேசத் துவங்கிய அன்புமணி, தன் ஒரு மணி நேர பேச்சிலும், தி.மு.க.,வை காய்ச்சி எடுத்தார். 'தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. கஞ்சா, போதை நடமாட்டம் அதிகரித்துள்ளது. என்னிடம் ஆறு மாதங்கள் ஆட்சியை கொடுங்கள்; தமிழகத்தையே தலைகீழாக மாற்றிக் காட்டுகிறேன்... 'கடந்த மூன்று ஆண்டுகளில், 1,968 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். ஆனால் கரூரில், 41 பேர் பலியான விஷயத்திற்கு மட்டும் ஊடக விவாதங்கள் பரபரப்பாக நடக்கின்றன. விவசாயிகள் தற்கொலை ஏன் வெளிவரவில்லை...?' என்றார். இதை கேட்ட மூத்த நிருபர் ஒருவர், 'கரூர் சம்பவத்தில் விஜய் மீது குற்றம் சாட்டாம நாசுக்கா நழுவிட்டாரே... நாளையே கூட்டணி அமைக்க வேண்டியிருக்கும்னு அடக்கி வாசிக்கிறாரோ...?' என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தனர்.