உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  வாய் தவறினாலும் உண்மை தான்!

 வாய் தவறினாலும் உண்மை தான்!

'தி.மு.க., தலைவர் ஸ்டாலினை முதல்வர் விஜய் விமர்சித்து பேசியதை கண்டித்து, ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன், சமீபத்தில் தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், மண்டபம் மத்திய தி.மு.க., ஒன்றிய துணை செயலர் பவுசியா பானுவை துவக்க உரையாற்ற அழைத்தனர். அவர் பேசும் முன், அடுக்குமொழியில் கோஷமிட்டார். அப்போது, 'இல்லம் தேடி கல்வி தந்தவர் ஸ்டாலின்; இல்லம் தேடி மதுவை கொண்டு வந்தவர் ஸ்டாலின்' என்றார். இதனால், அங்கிருந்த தி.மு.க., நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின், தவறை திருத்தி, 'இல்லம் தேடி மகளிர் உரிமைத்தொகை தந்தவர் ஸ்டாலின்' என முழங்கினார். இதை பார்த்த பார்வையாளர் ஒருவர், 'மனமகிழ் மன்றங்கள் என்ற பெயர்ல, தெருவுக்கு தெரு மதுபானக் கூடங்களை திறந்தது, தி.மு.க., அரசு தான்... அதனால, இந்தம்மா வாய் தவறினாலும் உண்மையைத் தான் சொல்லியிருக்காங்க...' என, 'கமென்ட்' அடித்தபடியே அங்கிருந்து நகர்ந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
செப் 15, 2026 16:57

கட்சி. தலைவி. மூலமே. ஒப்புதல். வாக்குமூலம். வந்துவிட்டது. என்று. எதிர்க்கட்சிகள். கிளம்பிவிடுவார்கள்