உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  ஓட்டை மாத்தி போடுறாங்க!

 ஓட்டை மாத்தி போடுறாங்க!

மதுரை, ஒத்தக்கடையில் நாம் தமிழர் கட்சி சார்பில், சமீபத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், 'சில ஆண்டுகளுக்கு முன், அமெரிக்கா சென்றிருந்த என்னிடம், அங்கிருந்த அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 'பாஸ்' என்று தான் என்னை அவர்கள் அழைத்தனர்; உன்னை எப்படி உன் நாட்டில் உயிரோடு விட்டுள்ளனர் என்று கேட்டனர். 'நாம் தமிழர் கட்சியின் கொள்கை என்ன என்று கேட்டனர்; சொன்னால், என் கட்சியில் சேர்ந்து விடுவீர்களா என்று கேட்டேன்; சிரித்து விட்டனர்' என்றார். இதை கேட்ட பார்வையாளர் ஒருவர், 'இவர்சொல்றது சரி தான்... இவரது கதைகள், கொள்கைகள் எல்லாம் கேட்க சிரிப்பா இருக்கும்... அதான், தொண்டை தண்ணீர் வற்ற இவர் பேசுறதை ரசிச்சு கேட்கிற பலரும், தேர்தலப்ப ஓட்டுகளை மாத்தி போட்டுடுறாங்க...' என, 'கமென்ட்' அடிக்க, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்து சிரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி