உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / இவர் தந்தைக்கும் பங்கு இருக்கே!

இவர் தந்தைக்கும் பங்கு இருக்கே!

சிவகங்கை மாவட்டத்தில் கம்யூ., தலைவர் ஜீவா, மகாத்மா காந்தி சந்தித்த சிராவயல் கிராமத்தில் அரசு சார்பில் அமைக்கப்படும் மணிமண்டப பூமி பூஜையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன், சிவகங்கை காங்., - எம்.பி., கார்த்தி பங்கேற்றனர்.கார்த்தி பேசுகையில், 'இந்திய சுதந்திர வரலாறு வட மாநிலங்களை மையப்படுத்தியே உள்ளது. ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்றவர்களிடம் கேட்டால் கூட, தெற்கில் உள்ள ஒரு சுதந்திர போராட்ட வீரரின் வரலாறு கூட தெரியாது; இதுதான் இந்தியாவின் கல்வி நிலை. தென்னிந்திய சுதந்திர போராட்ட வரலாறு, இந்தியாவில் பிரதிபலிக்கப்படவில்லை' என, ஆதங்கப்பட்டார். மூத்த நிருபர் ஒருவர், 'உண்மை தான்... அப்படி மறைக்கப்பட்ட வரலாற்றை தான் இப்ப பா.ஜ., தோண்டி துருவி வருகிறது... மத்தியில் தொடர்ந்து ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தானே, இந்த வரலாறுகளை மறைக்க முக்கிய காரணம்... அதிலும் இவரது தந்தைக்கு அதில் முக்கிய பங்கு இருக்கே...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ