உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  அரசியல்ல இதெல்லாம் சகஜம்பா!

 அரசியல்ல இதெல்லாம் சகஜம்பா!

சென்னை, திருவொற்றியூர் சட்டசபை தொகுதிக்கான வாக்காளர் திருத்த பட்டியல் தொடர்பான அனைத்து கட்சி கூட்டம், சமீபத்தில் திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில், மாநகராட்சி உதவி கமிஷனர் பத்மநாபன் தலைமையில் நடந்தது. இதில் பேசிய மா.கம்யூ., கவுன்சிலர் ஜெயராமன், 'வடமாநிலங்களுக்கு தமிழகம் அடிமையல்ல. தமிழகத்தில் பா.ஜ., சதி திட்டம் செல்லுபடியாகாது' என, ஆவேசமாக பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ.,வை சேர்ந்த ஜெய்கணேஷ் உள்ளிட்ட சிலர், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அனைவரையும் அதிகாரிகள் சமாதானப்படுத்தினர். கூட்டம் முடிந்து வெளியே வந்த, பா.ஜ., - மா.கம்யூ., மற்றும் தி.மு.க.,வினர் இயல்பாக சிரித்து பேசிக் கொண்டனர். இதை பார்த்த இளம் நிருபர் ஒருவர், 'உள்ளே எலியும், பூனையுமா அடிச்சுக்கிட்டு, வெளியில கொஞ்சி குலாவுறாங்களே...' எனக் கூற, மூத்த நிருபர், 'அரசியல்ல இதெல்லாம் சகஜம்பா...' என்றபடியே நடையை கட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை