வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இவர்களே நாளை ஜெயித்து பதவிக்கு வந்த பிறகு இப்படி செய்வாரா என்று பார்க்க வேண்டும்
மேலும் செய்திகள்
'அபராதம் விதிச்சா ஓடிடுவாங்க!'
01-Jan-2026
திருவள்ளூர் மத்திய மாவட்ட அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம், வானகரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் சமீபத்தில் நடந்தது. கூட்டத்தில், மாவட்ட செயலர் மற்றும் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு வந்த பெஞ்சமின், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இருக்கைகளில் அமராமல், ஆங்காங்கே நின்றிருந்ததை கவனித்தார். இதையடுத்து, அவரே மேடையில் இருந்து இறங்கி வந்து, அடுக்கி வைத்திருந்த நாற்காலிகளை எடுத்து போட்டு, அனைவரையும் அமரச் செய்தார். மேலும், ஓரமாக கால்கடுக்க நின்றிருந்த பத்திரிகையாளர்களையும் கவனித்த அவர், அவர்களுக்கும் வரிசையாக இருக்கைகள் ஏற்பாடு செய்து, அமர வைத்தார். இதை பார்த்த தொண்டர் ஒருவர், 'இதே, தி.மு.க., மாவட்ட செயலரா இருந்தா, தொண்டர்களை ஏவிட்டு, மேடையை விட்டு கீழே இறங்கியிருக்கவே மாட்டாரு...' என முணுமுணுக்க, சக தொண்டர்கள் ஆமோதித்தனர்.
இவர்களே நாளை ஜெயித்து பதவிக்கு வந்த பிறகு இப்படி செய்வாரா என்று பார்க்க வேண்டும்
01-Jan-2026