உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை: மூன்றாண்டு தி.மு.க., ஆட்சியில் மாநிலம் முழுதும் நுாற்றுக்கணக்கான அரசு மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளதாக சுகாதார துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அதே போல, மூன்றாண்டுகளில் கூடுதலாக உருவாக்கப்பட்ட மருத்துவர் பணியிடம் குறித்தும் அவர் தெரிவிக்க வேண்டும்.சரியா போச்சு... இருக்கிற காலி பணியிடங்களை நிரப்பவே ஆட்சியாளர்களுக்கு மனமில்லை... இதுல புதிய பணியிடம் வேற உருவாக்குவாங்களா? அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை: ஆயிரக்கணக்கான புதிய பஸ்கள் கொள்முதல் செய்யப்படும் என, ஒவ்வொரு பட்ஜெட்டிலும் தவறாமல் இடம் பெறும் அறிவிப்பை செயல்படுத்த முன்வராத தி.மு.க., அரசு, காலாவதியான மற்றும் முறையான பராமரிப்பு இல்லாத பஸ்களை, தொடர்ந்து இயக்கி, அதில் பயணிக்கும் பொதுமக்களின் உயிரோடு விளையாடுவதை, உடனடியாக நிறுத்த வேண்டும். ஆமாங்க... விஜயகாந்த் படத்துல அவர் எட்டி உதைச்சா வில்லன்கள் தான் பஸ்சுல இருந்து வெளியே வந்து விழுவாங்க... இப்ப சீட்டு உடைஞ்சு கண்டக்டர் தானா வந்து விழுறாரே!தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை: தமிழகத்தில் வெப்ப அலை வீசும் என, 20 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் கொடைக்கானலில் ஓய்வு எடுக்கிறார்; கோல்ப் விளையாடுகிறார். தமிழகத்தின் வெப்ப அலையை கட்டுப்படுத்த, குளிர்ச்சியில் அமர்ந்திருந்து பணிபுரிகிறாரோ. வெப்பத்தில் வெந்து சாகிறவன் சாகட்டும் என்பது தான் திராவிட மாடலோ?இந்த மாதிரி இம்சைகளை தவிர்க்க தான் எல்லாரும் அரசு பயணம்னு சொல்லி வெளிநாட்டிற்கு இன்ப சுற்றுலா போறாங்களோ?அ.தி.மு.க., மருத்துவ அணி மாநில இணை செயலர் டாக்டர் சரவணன் பேச்சு: ஓட்டு எண்ணிக்கை மையங்கள், தமிழக அரசு கட்டுப்பாட்டில் இருக்கிறது. உள்ளூர் போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு துணை ராணுவ படையை மட்டுமே கொடுத்திருக்கிறது. அங்கு, 'சிசிடிவி' மின்சாரம் உள்ளிட்ட அனைத்தையும் தமிழக அரசு பார்த்து கொள்கிறது. தேர்தல் அதிகாரிகளும் தமிழக அரசின் கீழ் பணியாற்றுகின்றனர். எனவே, மின் பிரச்னையால் கேமரா பழுது என்பதை ஏற்க முடியாது. இதற்கு மாநில அரசு தான் காரணம்.சர்வகட்சி சரவணன் ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவு வந்ததுக்கு அப்புறமா மீடியாவிடம் பேச இப்பவே ரிகர்சல் பார்க்குறாரோ?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி