உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

வேலுார் லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளர் கதிர் ஆனந்த் பேட்டி: அனைத்து இடங்களிலும் தேர்தல் அமைதியாக நடந்தது. இது குறித்து, மாவட்ட தேர்தல் அதிகாரி அறிக்கை கொடுத்துள்ளார். எல்லா ஓட்டுப்பதிவு மையத்திலும், 'சிசிடிவி' கேமரா உள்ளது. தோல்வி பயத்தில் ஏ.சி.சண்முகம் மூன்று ஓட்டுப்பதிவு மையங்களில் பா.ஜ., ஏஜன்ட்கள் அனுமதிக்கப்படவில்லை என கூறுகிறார்.எதிர் தரப்பு குற்றம் சொன்னா தோல்வி பயம்... இவங்க சொன்னா மட்டும் ஒரிஜினல் புகாரா? சிவகங்கை காங்., - எம்.பி.,கார்த்தி பேட்டி: தமிழகத்தில்,'இண்டியா' கூட்டணி வேட்பாளர்கள் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவர். சிவகங்கை தொகுதியில் ஆண்களை விட, பெண்கள் அதிகளவில் ஓட்டளித்துள்ளனர். தமிழகத்திலேயே பெண்கள் அதிகளவில் ஓட்டு போட்டது சிவகங்கையில் தான்.நீங்க ஆளுங்கட்சி கூட்டணி என்பதால், உரிமை தொகை கிடைக்காத மகளிர் ஒட்டுமொத்தமா உங்களுக்கு எதிரா திரண்டிருந்தா என்ன செய்றது?தமிழக பா.ஜ., துணை தலைவர்நாராயணன் திருப்பதி அறிக்கை: பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு நிதி திட்டத்தின் கீழ், 2022 - 23ம் ஆண்டு 15,524 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட, 5 சதவீதம் அதிகம். நாட்டின் முன்னேற்றத்தில், மக்கள் நலனில், தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்களிப்பை இது உணர்த்துகிறது. இனியாவது சமூக முன்னேற்றத்திற்கு துாணாக விளங்கும் பெரு நிறுவனங்களை குறை சொல்வதை விட்டு, அவர்களின் பங்களிப்பை பாராட்ட கம்யூனிஸ்ட்கள் முன் வர வேண்டும்.காம்ரேட்கள் இன்னும் அந்த ஒரு விஷயத்தில் மட்டும் தான் மாறாம இருக்காங்க... அதிலும் மாற்றம் எதிர்பார்த்தா எப்படி?புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் பேட்டி: பீஞ்சமந்தை, ஜார்தான்கொல்லை, பாலாம்பட்டு ஆகிய ஓட்டுச்சாவடி மையத்தில், பா.ஜ., பூத் ஏஜன்ட் தாமதமாக வந்தார் என, அனுமதிக்கவில்லை. அங்கு மறு ஓட்டுப் பதிவு நடத்தக் கோரி, மாவட்ட தேர்தல் அலுவலர், தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளோம். தேர்தல் முடிவு வந்த பின் வழக்கு தொடர்வது குறித்து முடிவு செய்யப்படும். இந்தியாவில் ராகுல் அலை இல்லை. தமிழகத்தில் பா.ஜ., கூட்டணி, 15 தொகுதிகளில் வெற்றி பெறும்.அந்த 15ல், தான் போட்டியிட்ட வேலுாரும் இருக்கும்னு உறுதியா சொல்ல மாட்டேங்கிறாரே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி