வடசென்னை தொகுதி தி.மு.க., - எம்.பி., கலாநிதி வீராசாமி பேட்டி: தற்போது
நான்காம் கட்ட தேர்தல் நடக்கிறது. ஒவ்வொரு கட்ட தேர்தலின் போதும், பா.ஜ.,
வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு குறைந்து வருவது பிரதமர் மோடியின்
பேச்சிலிருந்து தெரிகிறது. மீத கட்டங்களில் நடக்கும் தேர்தலின் போதும்,
'இண்டியா' கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழகத்தில் இவர் உட்பட பலர், மத்திய அமைச்சர் கனவில் மிதப்பது அப்பட்டமா தெரியுது!தமிழக பா.ஜ., பொதுச் செயலர் ஏ.பி.முருகானந்தம் அறிக்கை: 'ஒரு பொது மேடையில் பிரதமர் மோடியுடன் விவாதம் செய்ய நான் தயாராக இருக்கிறேன். ஆனால், அவர் என்னோடு விவாதத்தில் பங்கேற்க வரமாட்டார் என, எனக்கு நுாறு சதவீதம் உறுதியாக தெரியும்' என, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கூறுகிறார். இவ்வளவு பேச தெரிந்த ராகுல், நேரடியாக பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் போட்டியிட வேண்டியது தானே!ஏன்...? ராகுலின் வயநாடு தொகுதியில் பிரதமர் போட்டியிட வேண்டியது தானேன்னு காங்கிரஸ்காரங்க திருப்பி கேட்டா என்ன பண்ணுவாங்க?பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: சென்னை, திருவல்லிக்கேணியில் கஞ்சா கடத்தியதாக, 2013, 2019ல் கையும், களவுமாக பிடிக்கப் பட்ட பாசல் என்பவர், போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார். கஞ்சாவுடன் பாசல் கைது செய்யப்பட்ட போதிலும், விசாரணையை காவல் துறையினரே சீர்குலைத்ததாக நீதிபதி குற்றம் சாட்டியுள்ளார். காவல் துறையினரின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.கஞ்சா வியாபாரிகளிடம் வாங்குற மாமூலுக்கு, போலீசார் விஸ்வாசமா நடந்துக்கிட்டது இந்த ஒரு விஷயத்துலயே வெட்ட வெளிச்சமாகிடுச்சே!தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: டில்லி சென்று ஒரு யு - டியூபரை கைது செய்ய காட்டும் முனைப்பை, திருநெல்வேலி காங்கிரஸ் கட்சி தலைவர் கொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடிப்பதில் செலுத்தாமல் இருப்பது ஏனோ? மீண்டும் ராமஜெயம் படுகொலை வழக்கின் நிலை தானோ? தமிழக அரசு சி.பி.ஐ., விசாரணைக்கு ேவண்டு கோள் விடுக்க வேண்டும்.ராமஜெயம் கொலை வழக்கை விசாரித்த சி.பி.ஐ.,யாலேயே, குற்றவாளிகளை அடையாளம் காண முடியாதது ஏனோ?