உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை: பார்லிமென்ட் தேர்தலுக்கு முன் அறிக்கை வெளியிட்ட முதல்வர், 'அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தனக்கு மனது இருக்கிறது' என, தெரிவித்தார். அது போலவே கொரோனா பேரிடரில் பணி யாற்றிய போது, தொற்று ஏற்பட்டு உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தன் குடும்பத்தின் கண்ணீரை முதல்வர் துடைப்பாரா?தேர்தலுக்கு முன் கொடுத்த அறிக்கையை எல்லாம் நம்பலாமா... இப்ப முதல்வருக்கு மனசு வருமான்னு பாருங்க!த.மா.கா., இளைஞரணி மாநில தலைவர் யுவராஜா அறிக்கை: தமிழகத்தில் உள்ள, 3.75 கோடி பெண்களில், 72,000 ரூபாய் ஆண்டு வருமான உச்சவரம்பால், 1.16 கோடி பெண்களுக்கு மட்டுமே மாதம், 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. மற்ற பெண்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். வருமான உச்சவரம்பு வெவ்வேறு மாநிலங்களில் மாறுபடும் போது, நாடு முழுதும் பெண்களுக்கு மாதம், 8,500 ரூபாய் எப்படி வழங்க முடியும் என்பதை ராகுல் தெளிவுப்படுத்த வேண்டும். தி.மு.க.,வை போல ராகுலும் ஏமாற்ற பார்க்கிறாரா?அண்ணன் எவ்வழி, தம்பியும் அவ்வழி... இதை தனியா வேற விளக்கி சொல்லணுமா?பா.ஜ.,வை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் முருகன் பேட்டி: பா.ஜ., இம்முறை 400 இடங்களில் வெற்றி பெறுவது உறுதி செய்யப் பட்டுள்ளது. மூன்றாவது முறையாக மோடி பிரதமர் ஆவார். தேர்தல் கமிஷன் நேர்மையாக தேர்தல் நடத்தி வருகிறது. தேர்தல் கமிஷன் ஒரு சார்பாக இருந்தால், தி.மு.க., எப்படி இங்கு ஆட்சிக்கு வந்திருக்க முடியும்? கர்நாடகாவில் காங்கிரஸ் எப்படி வந்திருக்க முடியும்? ஒருவேளை இண்டியா கூட்டணி அதிக தொகுதிகளில் ஜெயிச்சிட்டா, தேர்தல் நேர்மையா நடக்கலைன்னு பேசுவாங்களா?பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: நாகர்கோவிலில் இருந்து துாத்துக்குடி சென்ற அரசு பஸ்சில், காவலர் ஒருவர் டிக்கெட் எடுக்காமல், கண்டக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி உள்ளது. தொடர்ந்து, தமிழகம் முழுதும் பல்வேறு காரணங்களை காட்டி, அரசு பஸ்களுக்கு காவல் துறை அபராதம் விதித்து வருகிறது. இது, போக்குவரத்து ஊழியர்களுக்கு எதிரான காவல் துறையின் பழிவாங்கும் செயலாகவே பார்க்கப்படுகிறது. பணி நிமித்தம் இல்லாமல் சென்றால் பஸ்சில் டிக்கெட் எடுப்பதும், பணியில் போக்குவரத்து விதிகளை மதிப்பதும் இரு துறையினரின் கடமை தானே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி