அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை: நடப்பாண்டுக்கான நீட்
தேர்வு நடப்பதற்கு முன் வினாத்தாள் கசிந்த புகார் எழுந்த நிலையில், தேர்வு
முடிவுகளில் ஏற்பட்டிருக்கும் கருணை மதிப்பெண் குளறுபடிகளையும் இணைத்து
பார்க்கும் போது, நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்தது உறுதி
செய்யப்பட்டுள்ளது. ஏழை, எளிய மருத்துவ மாணவர்களின் டாக்டர் கனவு, முறைகேடு
புகார்கள் நிறைந்த நடப்பாண்டு நீட் தேர்வை ரத்து செய்து விட்டு, உடனே
மறுதேர்வு நடத்த வேண்டும்.ரயில் விபத்தில் சிக்கிட்டா, இனி ரயில்லயே ஏற மாட்டோம்னு சொல்ல முடியுமா?பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: கடந்த 10 ஆண்டுகளில், பிரதமர் மோடி அரசு மேற்கொண்ட சீர்திருத்தங்களின் பயன்களை இந்தியா இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறது. அந்த சீர்திருத்தங்கள் காரணமாக உலக அரங்கில் வலிமையும், செல்வாக்கும் கொண்ட நாடாக இந்தியா உயர்ந்திருக்கிறது. உலக அரங்கில், இந்தியா எட்ட வேண்டிய உயரங்கள் இன்னும் ஏராளமாக உள்ளன. அவற்றுக்காக புதிய ஆட்சிக் காலத்தை மோடி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.மோடி ஆட்சியின் பலன்கள், இவரது கட்சி ஜெயிக்க உதவாம போயிடுச்சே!த.மா.கா., இளைஞரணி தலைவர் யுவராஜா அறிக்கை: முன்னாள் முதல்வர் பழனிசாமி, அரசு பள்ளி மாணவ - மாணவியருக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு கொடுத்து, நுாற்றுக்கணக்கான மருத்துவ மாணவர்களை உருவாக்க வழி வகை செய்தார். அதுபோல, அவரவர் மாநிலங்களில், கல்வி கொள்கைக்கு ஏற்ப இந்த திட்டங்களை வகுத்து, மருத்துவ சேர்க்கை நடத்துவதற்கு உரிய வழிமுறைகளை காண வேண்டும்.அ.தி.மு.க.,வினருக்கு கூட தோணாத இந்த யோசனை இவருக்கு தோன்றியுள்ளதே!தமிழக காங்., பொதுச் செயலர் காண்டீபன் பேச்சு: ஏற்கனவே பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்த சிவசேனா, அ.தி.மு.க., போன்ற கட்சிகள் நிலை என்ன ஆயிற்று என்பது நிதீஷ் குமார், சந்திரபாபு நாயுடுக்கு நன்றாக தெரியும். அவர்கள் இருவரும் மாநில அரசியல், தேசிய அரசியலில் நீண்ட அனுபவம் பெற்ற மூத்த தலைவர்கள் என்பதால், அவர்களிடம் பிரதமர் மோடியின் ஆளுமை அரசியல் வெற்றி பெறாது; தோல்வி தான் மிஞ்சும்.அவங்க இரண்டு பேருமே, ஒப்பற்ற தலைவர் மோடிதான் என பிரமாண வாக்குமூலமே தந்துட்டாங்களே!