உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை: பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றிருக்க வேண்டிய இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷுக்கு ஏற்பட்ட துரதிர்ஷ்டமான நிகழ்வு, மத்திய அரசின்தோல்வி என எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. வினேஷ் மட்டுமல்ல, இத்தாலியின் இமானுவேலா லியுஸி கூட, அதிக எடை காரணமாக, பாரிஸ் ஒலிம்பிக்கில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இத்தாலி எதிர்க்கட்சி இதை வைத்துஅரசியல் செய்யவில்லை.அப்ப, அவங்களுக்கு அரசியல் செய்ய தெரியலைன்னு அர்த்தம்... வேணும்னா நம்ம எதிர்க்கட்சிகளிடம், 'டியூஷன்' படிக்க சொல்லலாம்!அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை: தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சார்பில், சிறந்த மருத்துவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர், 'கொரோனா காலங்களில் மருத்துவர்களின் சேவை என்ன என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை' என, தெரிவித்தார். ஆனால், மருத்துவர்களின் தேவைகள், வலிகள், வேதனைகள் என்ன என்பதை மூன்று ஆண்டுகளாக தெரிந்து கொள்ளாமலும், புரிந்து கொள்ளாமலும் இருப்பவர் தான் நம் அமைச்சர்.அரசு டாக்டர்களின் சேவைகளை போல தேவைகளையும் அமைச்சருக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை... என்ன பண்ணுவார் பாவம், கஜானாவில் காசில்லையே!தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதிஅறிக்கை: 'ஒரு குறிப்பிட்ட மதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களுக்கு, அந்த மதம் சார்ந்த முடிவுகளை எடுப்பதற்கான உரிமையை ஏன் அளிக்க வேண்டும்? இது முறையா. இது அநீதி இல்லையா' என, தி.மு.க., -- எம்.பி., கனிமொழிகேட்டுள்ளார். இதைத்தான் 57 ஆண்டுகளாக நாம்கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஹிந்து மத வழிபாடுகளில் நம்பிக்கை இல்லாதஉங்கள் தந்தை, சகோதரர்மற்றும் உங்கள் கட்சியினருக்கு ஏன் ஹிந்து மதம் சார்பாக முடிவெடுக்க உரிமை அளிக்க வேண்டும்?இதுவும், 'உனக்கு வந்தா ரத்தம்; எனக்கு வந்தா தக்காளிசட்னியா?' என்ற கதை தான்!அ.ம.மு.க., பொதுச் செயலர்தினகரன் அறிக்கை: விளிம்பு நிலை மக்களுக்கான சொந்த வீடு கனவை முழுமையாக சிதைக்கும் வகையில், மூன்றாண்டு காலமாக உயர்த்தப்பட்ட அனைத்து விதமான வரிகள் மற்றும்கட்டண உயர்வுகளையும், உடனடியாக அரசு திரும்ப பெற வேண்டும்.உயர்த்திய கட்டணங்களை திரும்ப பெற்றால், எதுக்கும் பணமின்றி அரசின் ஒட்டுமொத்ததிட்டங்களும் சிதைந்து விடுமே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ