உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை:டெல்டா மாவட்டங்களில், பல பகுதிகளில் பெய்த கனமழையால், நெல் உள்ளிட்ட பயிர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு, பாதிக்கப்பட்டுள்ள விளை பொருட்களுக்கு நிவாரணமாக ஏக்கர் ஒன்றுக்கு குறைந்தபட்சம், 20,000 ரூபாய் கொடுக்க முன் வர வேண்டும்.பாவம் முதல்வர்... ஒரே நேரத்துல வெள்ள நிவாரணம், பொங்கல் பரிசு, விவசாயிகளுக்கு நிவாரணம்னு ஏகப்பட்ட செலவு... இதுக்கே உலக வங்கியில், 1 லட்சம் கோடி கடன் வாங்கணும் போலிருக்கே! பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: கடலுார் மாவட்டம், வீராணம் ஏரியில், ஆபத்தான அளவுக்கு நச்சு இருப்பது சென்னை பல்கலை, மாநில கல்லுாரி நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த ஏரி பாசன ஆதாரமாக மட்டுமின்றி, சென்னைக்கு குடிநீர் ஆதாரமாகவும் இருப்பதால், கலந்துள்ள நச்சுக்களை அழிக்க வேண்டியது முதன்மை கடமை. ஏரியின் ஓரத்தில் கோரைப்புற்களை வளர்த்தால் நச்சை உருவாக்கும் நீலப்பச்சை பாசி அழிந்து விடும். இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.கோரைப்புற்கள் வளர்த்தால் பிரச்னை சரியாகிடும்... ஆனா, நம்ம ஆட்சியாளர்களுக்கு கோடிகளில் திட்டங்களை தீட்டி தானே பழக்கம்!திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் அறிக்கை: என்னை போன்றவர்கள், ஒவ்வொரு பண்டிகை நாட்களையும், பிறந்த மண்ணில் உறவினர்களுடன் கொண்டாடுவதையே விரும்புகின்றனர். கொள்ளையடித்து கொண்டிருக்கும் சொகுசு பேருந்துகள், எவ்வாறெல்லாம் சொந்த ஊர் செல்லும் மக்களை வாட்டி வதைக்கும் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை.ஆம்னி பஸ்களில் கட்டணத்தை குறைக்க சொல்றாரா அல்லது அரசு பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வர சொல்றாரான்னு தெரியலையே!தமிழக காங்., விவசாய பிரிவு செயலர் ஆர்.எஸ்.ராஜன் அறிக்கை: 'இண்டியா' கூட்டணியின் அடுத்த கட்ட கூட்டம் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் பதவிக்கு ராகுல் தவிர்த்து, வேறு ஒரு கட்சி தலைவரை முன்னிறுத்த சில கட்சிகள் நினைப்பது, பொங்கி வரும் உலை பானையில் மண்ணை அள்ளிப் போடுவது போன்ற செயலாகும். அவர்களை கூட்டணியில் இருந்து வெளியேற்ற வேண்டும்.அவசரப்பட்டு அப்படி எல்லாம் சொல்லிடாதீங்க... கடைசியில், கூட்டணியில் காங்கிரஸ் மட்டும் தான் இருக்கும், பார்த்துக்கோங்க!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை