உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை /  பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

இந்திய கம்யூ., கட்சி மாநில செயலர் வீரபாண்டியன் அறிக்கை: ஒரே காலகட்டத்தில் பணியில் இணைந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு, ஒரே மாதிரியான ஊதியம் கோரி போராடும் ஆசிரியர் சங்க தலைவர்களை தமிழக அரசு அழைத்து பேசி, அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். போராடும், 1,400 ஆசிரியர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளையும் திரும்ப பெற வேண்டும். 'வெறும், 1,400 ஆசிரியர்கள் தான்னு அலட்சியமா இருந்துட்டா, அவங்க மற்றும் அவங்க குடும்பத்தினர் ஓட்டுகளை மொத்தமா இழக்க வேண்டியிருக்கும்'னு பயப்படுறாரோ?திருநெல்வேலி தொகுதி காங்., -- எம்.பி., ராபர்ட் புரூஸ் பேட்டி: தமிழகத்தை பொறுத்தவரை, 1 சதவீதம், 2 சதவீதம் என, ஓட்டு வங்கி வைத்துள்ள கட்சிகள் கூட முதல்வராக வேண்டும் என, ஆசைப்படுகின்றன. ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற கருத்தை எல்லா அரசியல் கட்சிகளும் முன்வைப்பது வழக்கம் தான்; அந்த ஆசை காங்கிரசுக்கும் உள்ளது. தொண்டர்களின் கோரிக்கையை மாநில தலைமையிடம் வலியுறுத்துவோம். மாநில தலைமையின் கருத்தை, அகில இந்திய தலைமைக்கு தெரியப்படுத்துவோம். தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம். 'ஆட்சியில் பங்கு' என்ற இவங்க கோரிக்கை, 2006ல் இருந்தே இருக்கு... 20 வருஷங்களா, அதற்கு மேலிடம் செவி சாய்த்த மாதிரியே தெரியலையே! விஸ்வ ஹிந்து பரிஷத் வட தமிழகத்தின் தலைவர் ஆண்டாள் சொக்கலிங்கம் பேச்சு: 'கோவில் கூடாது என்பது நம் நோக்கமல்ல; அது கொடியவர்களின் கூடாரமாகிவிடக் கூடாது' என பேசித்தான், தி.மு.க.,வினர் ஆட்சிக்கு வந்தனர். இன்று கோவில்கள் கொடியவர்களின் கூடாரமாக மாறி வருகிறது. கோவிலுக்கு பக்தர்கள் வராமல் தடுப்பதே, தி.மு.க., அரசின் கொள்கையாக இருக்கிறது. அதை தடுப்பதற்கு, தேர்தல் அன்று ஓட்டு போடுவதற்கு அனைவரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும். ஓட்டு போட வெளியில் வந்தால் மட்டும் போதுமா... யார் ஆட்சிக்கு வரணும் என்பதை விட, யார் வரக்கூடாது என தெளிவாக சிந்தித்து ஓட்டு போடச் சொல்லணும்! பெரம்பலுார் தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரபாகரன் பேச்சு: தி.மு.க., ஆட்சியில், மகளிர் உரிமை தொகை, மகளிர் இலவச பஸ் பயணம், பள்ளிகளில் காலை உணவு, கல்லுாரி மாணவியருக்கு புதுமை பெண் போன்ற பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. முதல்வர் தினமும் ஒரு திட்டத்தை அறிவித்து, செயல்படுத்தி வரு கிறார். எனவே, மீண்டும் தி.மு.க., தான் ஆட்சி அமைக்கும். 'எல்லா சாலைகளும் ரோமை நோக்கி' என்பது போல, முதல்வரின் எல்லா திட்டங்களும் தேர்தலை நோக்கியே இருக்கே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Anantharaman Srinivasan
ஜன 13, 2026 23:02

முதல்வர் குடுமி சும்மா ஆடல. திட்டமனைத்தும் ஓட்டை பிடுங்கும் பிரிதிபலன் நோக்கியே செய்யப்படுகிறது. தமிழகத்தில் சென்னை உள்பட ஒரு மாவட்டத்தில் கூட ரோடுகள் சரியில்லை...


Anantharaman Srinivasan
ஜன 13, 2026 22:56

ஆட்சி கொடியவர்களின் பிடியில் சிக்கியுள்ளதால் இந்து கோவில்களின் வருவாயும் சொத்துக்களும் முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது. மானமுள்ள இந்துக்களே விழித்தெழுங்கள். திமுக ஆட்சியை விரட்டியுங்கள். அது ஒன்றே தீர்வு.


கண்ணன்
ஜன 13, 2026 11:27

உண்டியல் ஒலிதான் மிகுத்துக் கேட்கிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை