| ADDED : ஜூன் 03, 2024 04:46 AM
குண்டும், குழியுமான சாலைமுதலியார்பேட்டை, வள்ளலார் வீதியில் சாலை குண்டும், குழியுமாக படுமோசமாக உள்ளது.ராஜா, முதலியார்பேட்டை.அத்துமீறும் வாகனங்கள்புதுச்சேரி - கடலுார் சாலை, ஏ.எப்.டி. மில், ரயில்வே கேட் மூடி திறக்கும்போது, தனியார் பஸ்கள் அத்துமீறி எதிர்பக்கம் வருவதால் கடும் டிராபிக் ஜாம் ஏற்படுகிறது. சி.சி.டி.வி., பொருத்த வேண்டும்.பாலமுருகன், புதுச்சேரி.பாதாள சாக்கடை பணி மந்தம்புதுச்சேரி லெனின் வீதியில் சாலை மற்றும் பாதாள சாக்கடை அமைக்கும் பணி பல மாதங்களாக நடந்து வருகிறது.முத்துராமன், நெல்லித்தோப்பு.விபத்து அபாயம்இந்திரா சிக்னலின் 4 சாலைகளிலும் பஸ்கள் நடுரோட்டில் நிறுத்தி பயணிகளை இறக்குவதால் வாகன விபத்து ஏற்படுகிறது. சாலையோரம் பஸ் நிறுத்த அடையாள குறிகள் பெயிண்ட்டால் எழுத வேண்டும்.கலைச்செல்வி, புதுச்சேரி.பயணிகள் அவதிபுதுச்சேரி - விழுப்புரம் இடையே இயக்கப்படும் பஸ்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர்.பரசுராமன், புதுச்சேரி.திறந்தவெளி பார்பஸ் நிலையமாக மாற்றப்பட உள்ள ஏ.எப்.டி. மைதானம், குடிகாரர்களின் திறந்த வெளி பாராக மாறி உள்ளது.கணேசன், புதுச்சேரி.