உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / ரூ.8,000த்தில் துவங்கி மாதம் ரூ.5 லட்சம் சம்பாதிக்கிறேன்!

ரூ.8,000த்தில் துவங்கி மாதம் ரூ.5 லட்சம் சம்பாதிக்கிறேன்!

தஞ்சாவூரில், 'வசீகர வேதா' என்ற பெயரில், அழகு சாதனங்கள் மற்றும் இயற்கை பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வரும் விஜயா மகாதேவன்:சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்புக்கான, 'ஏ டு இஸட்' பொருட்கள், பல்பொடி, பாத்திரம் துலக்கும் பொடி, மூலிகை டீத்துாள், சூப் மிக்ஸ் என, 64 பொருட்களை தயாரிக்கிறேன். 2017ல், 'வசீகர வேதா' என்ற பெயரில் சின்ன அளவில் பிஸ்னஸ் துவங்கினேன்.அதே ஆண்டு, 'இன்ஸ்டாகிராமில்' ஒரு பக்கம் துவங்கி, நாங்கள் என்னவெல்லாம் தயாரிக்கிறோம்; எப்படித் தயாரிக்கிறோம் என்பதையும் வீடியோவாக பதிவு செய்ய துவங்கினேன்.ஆவாரம்பூ குளியல் பொடி, முடி உதிர்வைத் தடுக்கும் மூலிகைப் பொடி, ஹேர் ஆயில் என, என் தயாரிப்புகளுக்கு வட மாநிலங்கள்ல இருந்து எக்கச்சக்கமான ஆர்டர்கள் வர துவங்கின. நான் கேட்காமலேயே அவர்ககள், 'பீட் பேக்'கையும் வீடியோவா எடுத்து அனுப்பினர்.ஒரு கட்டத்தில், என்னால் தனியாக செய்ய முடியாத அளவுக்கு ஆர்டர்கள் அதிகரித்தன.அப்போது தான் என் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள பெண்களை அணுகி, 'உங்க வீட்டு வேலைகளை முடித்து விட்டு, காலையில் கொஞ்ச நேரம், சாயந்தரம் கொஞ்ச நேரம் வந்து வேலை பார்க்கிறீங்களா'னு கேட்டேன். சந்தோஷமாக சம்மதித்தனர். இப்போது வரைக்கும் அவங்க தான் என்கூட இருக்காங்க.வாடிக்கையாளர்கள், அவங்கவங்க தேவைகளை குறிப்பிட்டு பிரத்யேகமான பொருட்களைக் கேட்க கேட்க, நான் அவை சம்பந்தமாக நிறைய தேடித் தேடிக் கத்துக்கிட்டேன். மூலிகைகள் பத்தி படிச்சேன்.அந்தக் காலத்தில் மகாராணிகள் கூட இயற்கையான பொருட்களை வைத்து தயாரித்த குளியல் பொடியைத் தான் பயன்படுத்தி இருக்கின்றனர்.'யு டியூப்'பிலும், வீடியோக்கள் போட துவங்கியதும், பிஸ்னஸ் இன்னும் பெருசாகியது. வெறும், 8,000 ரூபாய் முதலீட்டில் தான் துவங்கினேன். இப்போது மாதம், 5 லட்சம் சம்பாதிக்கிறேன். வரும் லாபத்தை மறுபடி பிஸ்னசிலேயே முதலீடு செய்கிறேன். ஒவ்வொரு மூலிகைக்கும் ஒரு தன்மை உண்டு. அந்தத் தன்மை மாறாமல், கலப்படமில்லாமல் தயாரித்துக் கொடுப்பது தான் முக்கியம். மூலிகைகளை எப்படி தேர்ந்தெடுக்கணும், எப்படி காய வைக்கணும், எப்படி தயாரிக்கணும்னு எல்லா தகவல்களையும் வெளிப்படையாக சொல்கிறேன்.இப்போதைக்கு சிங்கப்பூர், துபாய்க்கு சப்ளை செய்து வருகிறேன். உலகம் முழுக்க கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பது தான் ஆசை.என்னால பண்ண முடியுற மாதிரியே, இந்த பிஸ்னசை ஆர்வ முள்ள யாரும் செய்ய லாம். அவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க விரும்புறேன்.தொடர்புக்கு: 82488 60985


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

NicoleThomson
ஜன 17, 2024 06:13

நன்றி மேடம்


NicoleThomson
ஜன 17, 2024 13:14

எல்லா வீடியோவும் 1நிமிடம் மாத்திரம் ஓடுவது போன்று இருக்கே எப்படி சொல்லிக்கொடுக்கறீங்க?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை