செங்கல்பட்டு: புகார் பெட்டி; சாலை வளைவில் தடுப்புகள் அவசியம்
செய்யூர் அடுத்த வடக்கு செய்யூர் பகுதியில், நெல்வாய்பாளையத்திற்குச் செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது.தினமும் ஏராளமான வாகனங்கள், இச்சாலையில் சென்று வருகின்றன.இதில், வடக்கு செய்யூர் குடியிருப்புப் பகுதியில், அபாய வளைவு பகுதி உள்ளது. இங்கு சாலை ஓரத்தில் தடுப்புகள் இல்லாததால், இரவு நேரங்களில் வாகனங்கள் அதிவேகமாக வளைவுப் பகுதியை கடக்கும் போது, அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.இதனால், வாகன ஓட்டிகள் அப்பகுதியைக் கடக்கும் போது, பதற்றத்துடன் கடக்கின்றனர்.பெரும் விபத்து ஏற்படுவதற்குள், சாலை ஓரத்தில் தடுப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கு.மணி. செய்யூர்.