புகார் பெட்டி சாலை ஓரத்தில் குவிக்கப்படும் குப்பை மூட்டைகள்
திருப்போரூர் - செங்கல்பட்டு சாலையில் கரும்பாக்கம் அருகே சாலை ஓரத்தில் குப்பை, இறைச்சிக் கழிவுகள் கொட்டுவது, 'செப்டிக் டேங்க்' கழிவுநீரை லாரிகளில் கொண்டுவந்து வெளியேற்றுவது போன்றவை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதை யாரும் கண்டுகொள்வதில்லை.இந்நிலையில், மூட்டை மூட்டையாக குப்பையை எடுத்து வந்து, சாலையோரத்தில் வீசிச் செல்வது சமீப நாட்களாக அதிகரித்துள்ளது.சமீபத்திலும் மர்ம நபர்கள் சிலர், வாகனங்களில் மூட்டை மூட்டையாக குப்பையை எடுத்து வந்து, ஆங்காங்கே சாலையோரத்தில் கொட்டி விட்டுச் சென்றுள்ளனர். இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கே.விஜயகாந்த், கரும்பாக்கம்.