மேலும் செய்திகள்
கால்நடை மருந்தக கட்டடத்திற்கு ஆபத்து
22-Jan-2025
சைதாப்பேட்டை கால்நடை பன்முக மருத்துவமனை கட்டடம் கட்டப்பட்ட பின், அதன் பழைய கட்டடம் பாழடைந்து, புதர் மண்டிய நிலையில், பராமரிப்பின்றி இருக்கிறது.இங்கு சுற்றுச்சுவர் இருந்தும், சைதாப்பேட்டை பிரதான சாலை முகப்பில் இருக்கும் கேட்டில் செக்யூரிட்டி இல்லாததால், ஆட்டோக்கள் நிறுத்தும் இடமாக மாறி வருகிறது. மேலும், சிலர் இயற்கை உபாதைகளை கழிக்கும் இடமாகவும், பயன்படுத்தி வருகின்றனர். இந்த வளாகத்தில், நிறைய பிளாஸ்டிக் குப்பையும் குவித்து வைக்கப்பட்டுள்ளது.இதனால், மருத்துவமனைக்கு செல்லப்பிராணிகளை அழைத்து வருவோரும், அதிகாரிகளை சந்திக்க வருவோரும் சிரமத்துக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, பழைய கால்நடை மருத்துவமனை கட்டடத்தை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கணேசன், சைதாப்பேட்டை.கட்டடமே தெரியாத அளவிற்கு புதர் மண்டி காணப்படும் கால்நடை மருத்துவமனை.
22-Jan-2025